மிடில் ஈஸ்ட் ஸ்வீட்

420

 

தேவையான பொருட்கள்:

சீனி-2 டேபிள் ஸ்பூன்

பால் பவுடர்-2 டேபிள் ஸ்பூன்

கார்ன்ஃப்ளார்-2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்-1கப்

கட்டியான கிரீம் அல்லது பால் ஏடு-2 டேபிள் ஸ்பூன்

மொஜரல்லா சீஸ்-100 கிராம்,பட்டர்- தேவைக்கேற்ப

Kunafa dough/ அணில் சேமியா-தேவைக்கு

சுகர் சிரப் செய்ய தேவையான பொருட்கள்:

சீனி-அரை கப்

தண்ணீர்-அரை கப்

ரோஸ் வாட்டர்-கால் டீஸ்பூன்

எலுமிச்சை-கால் டீஸ்பூன்

குங்குமப்பூ-சிறிதளவு (விருப்பப்பட்டால்)

 

 

 

Step 1

 

செய்முறை: முதலில் ஒரு பேனில் சீனி பால் பவுடர் கார்ன் ஃப்ளார் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து காய்ச்சவும்.கைவிடாமல் கட்டி விழாதவாறு நன்கு காய்ச்சி கொண்டிருக்கவேண்டும்.ஆறிய பின் கெட்டியான கிரீம் அல்லது பால் ஏடு சேர்த்து கொள்ளவும்.அத்துடன் சீசை துருவி அத்துடன் மிக்ஸ் பண்ணவும். சுகர் சிரப் செய்வதற்கு முதலில் சீனி மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.ஓரளவு திக்காக வந்ததும் ரோஸ் வாட்டர் மற்றும் லெமன் சேர்க்கவும்.விருப்பப்பட்டால் குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் மெல்லிய சேமியா அல்லது அணில் சேமியா கிடைத்தால் நன்கு மெல்லியதாக உடைத்துக்கொள்ளவும்.அத்துடன் மெல்ட் பட்டர் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் பண்ணி வைக்கவும்.ஒரு ட்ரேயில் பட்டர் தடவி சேமியாவை பரப்பி ஒரு டம்ளர் வைத்து சமமாக அழுத்தவும்.பின்னர் சீஸ் கலவையை சமமாக பரப்பி விடவும்.இதை அவனிலும் செய்யலாம்.அவன் இல்லை எனில் தவாவில் வைத்து அடுப்பிலும் பண்ணலாம்.பின்னர் மீதியுள்ள சேமியாவை மெல்லியதாக அதன் மேல் பரப்பி விடவும்.அவனில் பண்ணுவதாக இருந்தால் 180 டிகிரி வைத்து இருபக்கமும் ஹீட் கொடுத்து 30 இருந்து 40 நிமிடங்கள் வரை வேகவிடலாம்.கோல்டன் ப்ரௌன் வந்ததும் அவனிலிருந்து எடுத்து ஓரத்தில் மெதுவாக கட் செய்து வேறொரு ப்ளேட்டில் மாற்றி அதற்குமேல் தயார் பண்ணி வைத்துள்ள சுகர் சிரப்பை அதற்குமேல் ஊற்றவும்.பிறகு கட் பண்ணி பரிமாறலாம் சுவையான “மிடில் ஈஸ்ட் ஸ்வீட்/Kunafa”ரெடி…..