முருங்கைக்காய் மசாலா

479

தேவையான பொருட்கள்.:
முருங்கைக்காய் – 3 (விரல் நீள துண்டுகளாக்கவும்),
பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – தலா அரை கப், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

அரைக்க.:
தனியா (மல்லி) – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்).

செய்முறை.:
வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி அரைக்கக் கொடுத் துள்ள பொருள்களைச் சேர்த்து வறுத்து எடுக்கவும்.

ஆறிய பிறகு அதனுடன் தண்ணீர்விட்டு நைஸாக அரைத்து எடுக்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டுச் சூடாக்கி சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதனுடன் அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறவும்.

பிறகு, முருங்கைத் துண்டுகளைப் போட்டு மூழ்கும்வரை தண்ணீர்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூடி போட்டு வேகவிடவும்.

தண்ணீர் வற்றி காய் வெந்த பிறகு இறக்கிப் பரிமாறவும். முருங்கையில் இரும்புச் சத்து, கொழுப்புச் சத்து வைட்டமின் ஏ, சி ஆகியவை உள்ளன. இது நரம்புகளுக்கு நல்லது.