முஜாஃப்பர்

424

முஜாஃப்பர் என்பது பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு பாயாசம்,கீர் வகைகளிலிருந்து சற்று மாறுபட்டது தான்.இதில் பாஸ்மதி அரிசி மற்றும் குங்குமப்பூ வின் மணம் இதற்கு தனித்துவமான சுவை கூட்டும். காயலர்களுக்கு இது புதிது. ஆனால் உருது முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு விஷேசத்திலும் செய்யப்படும் பாரம்பரிய இனிப்பு பதார்த்தம். திருமணங்களில் முஜாஃப்பர் இல்லாமல் திருமண விருந்து நிறைவு பெறாது. முக்கியமாக பெங்களூர்,மைசூரில் இந்த இனிப்பு இடம் பெறாத இஸ்லாமிய திருமணங்களே இல்லை எனலாம். தேவையான பொருட்கள் :- பால் -1 litrபாஸ்மதி அரிசி – 75-100 gசீனி -100 g (தேவைக்கு)கோவா – 25 gபால் பவுடர் (அ) மில்க் மெய்ட்- 50 gநெய் -2 tbsபாதாம்,முந்திரி – 1 cup (தோலுரித்தது)ஏலக்காய் – 3 -4குங்குமப்பூ – சிறிதளவு 

பாஸ்மதி அரிசியை அலசி ஊற வைக்கவும். பாலை பால் பவுடர் சேர்த்து நன்றாக மணம் வரும் வரை காய்ச்சவும். அதே நேரத்தில் ஊற வைத்த அரிசியை 4,5 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். நன்கு வெந்த அரிசியை நன்கு மசித்து காய்ச்சிய பாலில் சேர்க்கவும்.கிளறி கொண்டே இருக்கவும்.தீயை மிதமான சூட்டிலேயே வைத்திருக்கவும். இதனுடன் தூள் செய்த ஏலக்காய் சேர்க்கவும். சிறிதளவு வெதுவெதுப்பான பாலில் குங்குமப்பூ கரைத்து பால் கலவையுடன் ஊற்றவும். பாலும் அரிசியும் நன்கு கலந்து கெட்டியாகும் போது சீனி சேர்த்து கரைக்கவும் .இதனுடன் கோவா சேர்த்து கரையும் வரை நன்கு கிளறவும்.இறுதியில் மில்க் மெய்ட் சேர்க்கலாம். ஒரு வாணலியில் நெய் சேர்த்து நறுக்கிய முந்திரி,பாதாமை பொன்னிறமாக வறுத்து இந்த கலவையுடன் சேர்க்கவும்.எல்லாம் நன்கு சேர்ந்து திரண்டதும் அடுப்பை அணைக்கவும். சூடாகவோ,குளிர வைத்தோ அலங்கரித்து பரிமாறவும். குறிப்பு:- குங்குமப்பூவின் தரத்தை பொறுத்து நிறமும் மணமுமம் மாறுபடும். குங்குமப்பூ இல்லையெனில் மணத்திற்கு ரோஸ் வாட்டர் (பண்ணீர்) பயன்படுத்தலாம். முன் தயாரிப்பு :- 15 நிமிடங்கள்சமைக்கும் நேரம்:- 45 நிமிடங்கள்பரிமாறும் அளவு :- 6-7 நபர்கள் ஹலீமுன்னிஸா .,பெங்களூர்.