நாகர்கோவில் புளி மிளகாய்…

182

தேவையானபொருட்கள்…
நாகர்கோவில்/கேரளா மிளகாய் – 10 முதல் 12புளி – சிறிய நெல்லிக்காய் அளவுஉப்பு – 1 தேக்கரண்டிவெல்லம் – ஒரு சிறிய துண்டுபெருங்காயம் – 1 சிட்டிகைகடுகு – 1 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டிதேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டிவெந்தயம்-1/2தேக்கரண்டிமஞ்சள் பொடி – 1 / 2 தேக்கரண்டி

செய்முறை…
இந்த மிளகாய் நாகர்கோவிலில் கிடைக்கும். மற்ற ஊர்களில் கிடைக்குமா என்று தெரியவில்லை இந்த மிளகாயில் காரம் மீடியமாக இருக்கும் . மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு வெந்தயம் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும் அதில் நறுக்கிய மிளகாய் மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும் உப்புசேர்த்து நன்றாக வதக்கவும் நன்றாக வதக்கியபின் புளியை கரைத்து சேர்க்கவும்.

நன்றாக கொதி வந்தவுடன் வெல்லம் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும்
குழம்பு பதம் வந்ததும் இறக்கி விடவும் அருமையான புளி மிளகாய் தயார் . இட்லி தோசை க்கு தொட்டுக்கொள்ளலாம். கொஞ்சம் கெட்டியாக செய்தால் ஊறுகாய் போல் தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளலாம்.