நார்த்தங்காய் இனிப்பு பச்சடி

860

தேவையானவை:

நார்த்தங்காய் – 1
வெல்லம் – அரை கிண்ணம்
(தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 1
மிளகாய் வற்றல் – 1
உப்பு – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – சிறிது

#செய்முறை:
நார்த்தங்காயைச் சுத்தம் செய்து, விதைகளை நீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய நார்த்தங்காயைச் சேர்த்து வதக்கி அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பச்சை வாசனை போகவிடவும். பின்னர், கரைத்த வெல்லத்தை வடிக்கட்டி பின்னர் வாணலியில் விட்டு பாகு பதத்திற்கு காய்ச்சவும். பின்னர், வெல்லப் பாகை நார்ந்தங்காயுடன் சேர்த்து கிளறவும். எல்லாம் ஒன்று சேர்ந்து ஜாம் பதம் வந்தவுடன் இறக்கவும். சுவையான நார்த்தங்காய் இனிப்பு பச்சடி தயார். சப்பாத்தி, தோசை தகுந்த சைடிஷ்.