நோய் எதிர்ப்புச் சக்தி தரும் நீராகாரம்

192

தேவையான பொருட்கள்.:
வடித்த சாதம் – 2 கப்,
சாதம் வடித்த கஞ்சி – ஒரு கப், தோலுரித்த சின்ன வெங்காயம் – அரை கப்,
மோர் – சிறிதளவு (விருப்பப்பட்டால்), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்),
தண்ணீர், உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:
மண் சட்டியில் சாதத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைக்கவும்.

மறுநாள் காலையில் நீரை வடித்துத் தனியாக வைக்கவும்.

சாதத்துடன் உப்பு, மோர் சேர்த்துப் பிசையவும்.

அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம், வடிகட்டிய தண்ணீர், சாதம் வடித்த கஞ்சி சேர்த்துக் கலந்து பருகவும்.

மோர் மிளகாய், பூண்டு ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

சிறப்பு.:
இது செரிமான சக்தி தரும். நோய் எதிர்ப்புச் சக்தியும் நிறைந்தது.