நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெண் பூசணி தயிர் சாதம்.

534

தேவையான பொருட்கள்.:
நறுக்கிய வெண்பூசணி – 200 கிராம்,
தயிர் – 100 கிராம் (ஒரு கப்),
கொத்தமல்லி சிறிதளவு,
குழைய வேக வைத்த சாதம் – அரை கப்
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

தாளிக்க.:
கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை.:
வெண் பூசணியின் தோலைச் சீவி சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய வெண் பூசணியில் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

வெந்ததும் ஒரு கப் தயிர் சாதம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாய் சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பூசணி கலவையில் சேர்க்கவும்.

அதில் கொத்தமல்லி இலையைத் தூவி குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் கொடுத்து அனுப்பலாம்.

சுவையான சத்தான வெண் பூசணி – தயிர்சாதம் ரெடி