ஓமக் குழம்பு.

270

தேவையானபொருட்கள்….

ஓமம் – இரண்டு டீஸ்பூன், புளி – எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், கடுகு, கடலைபருப்பு – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

#செய்முறை…

ஓமத்தை சிறிதளவு எண்ணெயில் வறுக்கவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி சேர்த்து வறுக்கவும். இதில் புளியைக் கரைத்து ஊற்றி… உப்பு, ஓமம் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

#குறிப்பு…

ஓமம் ஜீரண சக்தி தரும். வயிறு உபாதைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.