பானகம்

552

 

புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை, பனைவெல்லம் அல்லது வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன், சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன், தண்ணீர் – 2 கப் 

செய்முறை: வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளி நீரில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும். 

இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே பருகலாம். சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். உடலையும் குளிர்ச்சியாக்கும்.