பலாக்கொட்டை கத்திரி கூட்டு.

48

தேவையானவை: கத்திரிக்காய் – 100 கிராம்,
பலாக்கொட்டை – 10, தேங்காய் – ஒரு மூடி (துருவிக் கொள்ளவும்), பூண்டு – 4 பல், மிளகாய் வற்றல் – 4, தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு, உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு.

செய்முறை: கத்திரிக்காயை கழுவி பொடியாக நறுக்கவும். பலாக்கொட்டையையும் கத்திரியையும் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் மிளகாய் வற்றல், பூண்டு சேர்த்து அரைத்து, காயுடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். கடாயில் தேங்காய் எண் ணெயை காய வைத்து… கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்து பரிமாறவும்.

குறிப்பு: கத்திரிக்கு பதிலாக கோவைக்காயிலும் இதை செய்யலாம்.