பலாப்பழ அல்வா

313

தேவையானபொருட்கள்…

பலாச்சுளைகள் – 20, வெல்லம் – 200 கிராம், முந்திரிப்பருப்பு – 10, ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, நெய் – 100 மி.லி.

செய்முறை…

சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது நெய்யில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வெல்லத்தை இடித்து சிறிது தண்ணீரில் கரையவிட்டு வடிகட்டி கெட்டியாக பாகு காய்ச்சவும். உருட்டும் பதம் வந்ததும் அரைத்து வைத்துள்ள பலாச்சுளை விழுதைப் போட்டு, நெய் விட்டு மிதமான தீயில் கிளறவும். நெய்யில் முந்திரிப்பருப்பை வறுத்துப்போட்டு ஏலக்காய்த்தூள் சேர்த்து கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

குறிப்பு…
இது பலாப்பழ சீசன். இந்த சக்கவரட்டியை தயாரித்து வைத்துக் கொண்டால், குழந்தைகளுக்கு சுகியன், பாயசம், போளி என்று விதவிதமாக தயாரித்துக் கொடுக்கலாம்.