பெசரட்டு

275

கொளுத்தும் கோடை வெப்பத்தினால் உடலில் உள்ள நீர் சத்து வறட்சி அடைய ஆரம்பித்து, சருமம் பொலிவின்றி சோர்வுடன் காட்சியளிக்கும். உடல் வறட்சி அடையும்போது நீர்ச்சத்து மட்டும் குறைவதில்லை. நீரில் கரையக்கூடிய விட்டமின்கள், கனிமகச்சத்துக்கள் போன்றவற்றை இழந்து, அதனால் உடல் பலகீனம், வாந்தி,தலைவலி,மலச்சிக்கல் மற்றும் தசைப்பிடிப்புக்கள் போன்றவற்றையும் சந்திக்கக்கூடும். எனவே கோடையில் வெறும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் அதிகரிக்காமல் சற்று அத்தியாவசிய சத்துக்கள் கிடைக்கும்படியான காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் இவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு கோடையில் சந்திக்கும் உடல் வெப்பம், வயிற்று எரிச்சல் இவற்றிலிருந்து விடுபடலாம். விட்டமின் C மற்றும் விட்டமின் B நிறைந்துள்ள பாசிப்பயிறை உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்கலாம். பெசரட் ஆந்திராவில் பேமஸ் ஆனா தோசை இது. பாசிப்பயிறை குழந்தைகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்.ஆனால் இப்படி பெசரட் பண்ணினால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை :

பாசிபயிறு – ½ கிலோ
வெங்காயம் – 250 கிராம்
சீரகம் – 3 டீ ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
வெள்ளை பூண்டு – 6 பல்லு [ பெரியது ]
உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

 

பாசிபயிரை 9 or 10 மணி நேரம் ஊறவைக்கவும்.

வெள்ளைப்பூண்டை தோல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பாசிபயிறு, வெள்ளை பூண்டு மற்றும் உப்பு இவைகளை மிக்ஸ்யில் போட்டு லேசாக தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்திற்கு நன்கு அரைக்கவும்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பச்சைமிளகாயையும் பொடிதாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

ஒரு கப்பில் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் சீரகம் இவைகளை கலந்து வைத்துக்கொள்ளவும்.

இந்த மாவை 1 கப் அளவிற்கு தோசை கல்லில் ஊற்றி, தோசை சுற்றுவதைப்போல் சுற்றி விடவும்.பிறகு எண்ணெய் ஊற்றி இந்த மாவின்மேல் வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் சீரகம் mixing ஐ போட்டு விடவும்.
தோசை போல் நன்கு பொரிந்ததும் அதை திருப்பி போட்டு கொஞ்சம் பொரிய விடவும்…

அப்புறம் என்ன…பெசரட் ரெடி….

சமைக்கும் நேரம்: 30 நிமிடம்.
கூடுதல் குறிப்பு :

பெசரட்டை பச்சைமிளகாய் சட்னி வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குறைவான தீயில் வைத்து சுட்டு எடுக்கவும்.எண்ணெய் ரெம்ப அதிகம் ஊற்ற தேவையில்லை.