பூரண போளி.

255

தேவையான பொருட்கள்.:
மைதா மாவு, கடலைப்பருப்பு – தலா 100 கிராம்,
வெல்லம் (பொடித்தது) – 200 கிராம், தேங்காய் – ஒரு மூடி (துருவிக்கொள்ளவும்),
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – 100 மில்லி,
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை.:
மைதா மாவுடன் நல்லெண்ணெய், கேசரி பவுடர் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு பிசைந்துகொள்ளவும்.

கடலைப்பருப்பை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வேகவிடவும்.

தண்ணீர் வடித்து தேங்காய்த் துருவல் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

வெல்லத்தை சிறிதளவு தண்ணீர்விட்டு கரைத்து கொதிக்கவிட்டு வடிக்கட்டி பாகு காய்ச்சவும்.

வெல்லம் காய்ந்து சிறிதளவு கெட்டியானதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்றாகக் கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும். இதுதான் பூரணம்.

பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டவும்.

வாழையிலையில் நெய் தடவி மாவு உருண்டையை வைத்து பரவலாக சப்பாத்தி வடிவில் கைகளால் தட்டி உள்ளே பூரணத்தை சிறு உருண்டையாக உருட்டி வைத்து மூடி போளியாக தட்டவும்.

தோசைக்கல்லைச் சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, போளியைப் போட்டு, இருபுறமும் சிறிதளவு நெய் தடவி வாட்டி எடுக்கவும்.