ரவை இருந்தால் வித்தியாசமான சுவையில் காலை டிஃபன் ரெடி..!

206

வீட்டில் ரவை இருந்தால் ரவை உருண்டை செய்து சாப்பிடலாம். இது சுவைக்கவும் வித்தியாசமாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ரவை – 1 கப்

சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு – தே.அபெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன்

தொக்கு வைக்க

தக்காளி – 2
வெங்காயம் – 1
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றாமல் சீரகம் சேர்த்து வறுக்கவும். அதோடு ரவையை சேர்த்து சற்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும். இதை தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக கடாய் வைத்து 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கும் போது எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். அதோடு பெருங்காயத்தூளையும் சேருங்கள்.

பின் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கிளறிக்கொண்டே இருங்கள். கட்டிகளாக இல்லாமல் கிளருங்கள். தண்ணீர் இறுகி சப்பாத்தி மாவு பிசையும் பதத்திற்கு வரும் போது அடுப்பை அணைத்து 5 நிமிடங்களுக்கு தட்டு போட்டு மூடி விடுங்கள்.

பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளுங்கள். அதை இட்லி குண்டானில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வையுங்கள்.

அதேசமயம் கடாய் வைத்து எண்ணெய் ஊற்று கடுகு சேர்த்து தாளியுங்கள். பின் வெங்காயம் போட்டு வதக்கியதும் தக்காளியை அரைத்து ஊற்றுங்கள்.

பின் மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். உப்பு கொஞ்சம் போல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருங்கள். தண்ணீர் வற்றி கெட்டி பதத்திற்கு வந்ததும் வேக வைத்த ரவை உருண்டைகளை சேர்த்து மசாலாக்கள் சேருமாறு பிறட்டுங்கள்.

அவ்வளவுதான் காலை உணவிற்கு ரவை மசாலா உருண்டை தயார்.