சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

267

பாசிப்பருப்பு, ஜவ்வரிசியில் பாயாசம் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1

பாசிப்பருப்பு – கால் கப்
ஜவ்வரிசி -1 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம் – அரை கப்
தேங்காய் துருவல் – ஒரு கைப்பிடி
முந்திரி பருப்பு – 6
காய்ச்சிய பால் – 1 டம்ளர்
நெய் – சிறிதளவு

சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம்

செய்முறை:

சர்க்கரை வள்ளிக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக்கொள்ளவும்.

அதுபோல் ஜவ்வரிசி, பாசி பருப்பு இரண்டையும் தனித்தனியாக வேகவைத்துக்கொள்ளவும்.

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.

கடாயில் வெல்லக்கரைசலை ஊற்றி அதனுடன் வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்து வந்ததும் ஜவ்வரிசி சேர்க்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும் பாலை ஊற்றி லேசாக கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.

நெய்யில் தேங்காய் துருவல், முந்திரி பருப்பை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறலாம்.

சூப்பரான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயாசம் ரெடி.