சிறுகீரை உருண்டை குழம்பு

351

தேவையான பொருட்கள்.:
பொடியாக நறுக்கிய சிறுகீரை – ஒரு கைப்பிடி அளவு,
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா 100 கிராம்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
புளி – எலுமிச்சம்பழ அளவு,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:
கீரையை சிறிதளவு எண்ணெயில் வதக்கவும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

புளியைக் கரைத்து அதனுடன் சாம்பார் பொடி சேர்க்கவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த பருப்பு விழுதை சேர்த்துக் கிளறி, பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

கரைத்து வைத்த புளித் தண்ணீர் – சாம்பார் கலவையை கொதிக்கவிட்டு, வதக்கிய கீரை, வேக வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.

பிறகு சிறிதளவு எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.