அப்பத்தாவின் சோத்து சட்னி

409

இந்த துவரை பருப்பு சட்னி பெரும்பாலும் இரவு நேரங்களில்  இது சுடுசாதத்துடன் சாப்பிட சுருக்கென்று இருக்கும்.

இதை கேப்பை கூழ், சோள சாப்பாடு உடன் சாப்பிடவும் மிகவும் டக்கராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

புளி ஒரு எலுமிச்சை பழஅளவு
துவரம் பருப்பு 1/2 கப்
காஷ்மீரி மிளகாய் 2
வரமிளகாய் 3
பச்சை மிளகாய் 2
தேங்காய் துருவல் 1/3 கப்
சின்ன வெங்காயம் 8
பூண்டு பற்கள் 5
உப்புகல் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் தேவையான அளவு

செய்முறை

1. புளியை ஒரு இடுக்கியை கொண்டு கேஸ் அடுப்பு தீயில் 20 விநாடிகள் காண்பிக்க வேண்டும் . வெளிதோற்றம் கருப்பாகும் வரை.

2. ஒரு அகன்ற கெனமான இரும்பு வடச்சட்டியில் கொஞ்சமாக ( ஒரு தேக்கரண்டி) மரசெக்கு கடலெண்ணய் விட்டுகோங்க வரமிளகாய் வகைகளை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வறுத்து இறக்கி கொள்ள வேண்டும்.

3. அதை தனியாக எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும்.

4. இப்பொழுது தேங்காய் துருவலை இரும்பு வடச்சட்டியில் சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை சிவக்க வதக்க வேண்டும்.

5. இப்பொழுது மிக்ஸியில் ஆறவைத்துள்ள பருப்பு, ஆறவைத்துள்ள வரமிளகாய், ஆறவைத்துள்ள தேங்காய் துருவல், கருக்கிய புளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்துகோங்க அதனுடன் தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்து இதனுடன் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க நன்றாக மையமாக விழுதாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.

6. இந்த சட்னி அரவை கெட்டியாக தான் இருக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக சேர்தால் சுவை குன்றிவிடும்.