சுண்டைக்காய் வற்றல் குழம்பு

406

தேவையான பொருட்கள்.:
சுண்டைக் காய் வற்றல் – 20,
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் – 2,
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு – தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன், உப்பு தேவையான – அளவு.

செய்முறை.:
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குறிப்பு.:
இதற்கு தயிர் பச்சடி, சுட்ட அப்பளம் சிறந்த காம்பி னேஷன். சுண்டைக்காய் வற்றல் குழம்பு பித்தத்தைத் தணிக்கும்.