சூப்பரான சுவையில் முருங்கைக்காய் குழம்பு எப்படி செய்வது தெரியுமா..?

294

புளி பயன்படுத்தாமல் முருங்கை காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
#தேவையான_பொருட்கள் :
முருங்கைக்காய் – 1
தக்காளி – 2
வெங்காயம் – 1
கடுகு – 1 tsp
சீரகம் – 1 tsp
வெந்தயம் – 1/2 tsp
மஞ்சள் தூள் – 1 tsp
குழம்பு மிளகாய் தூள் – 2 tbsp
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
#செய்முறை :
கடாயில் 1 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் கொஞ்சம் சேர்த்து முருங்கைக்காயை வேக வைத்து எடுத்துக்
கொள்ளுங்கள்.
தண்ணீரை ஊற்ற வேண்டாம் அப்படியே வையுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளித்துக்
கொள்ளுங்கள்.
பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து கண்ணாடி போல் வதக்குங்கள். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கிக்கொள்ளுங்கள்.
வதங்கியதும் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்குங்கள்.
பின் முருங்கைக்காயை வேக வைத்த தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்க துவங்கும்போது கறிவேப்பிலை சேருங்கள்.
பச்சை வாசனை போனதும் வேக வைத்த முருங்கைக்காயை சேர்க்கவும். உங்களுக்கு குழம்பு தேவையான பதம் வரும் வரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடுங்கள்.
அவ்வளவுதான் முருங்கைக்காய் குழம்பு தயார்.