சூப்பரான பனங்கிழங்கு துவையல்

325

பனங்கிழங்களில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பனங்கிழங்கில் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான பனங்கிழங்கு துவையல் பனங்கிழங்கு துவையல்

தேவையான பொருட்கள்

பனங்கிழங்கு – 5

காய்ந்த மிளகாய் – 3
மிளகு – அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 4,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

பனங்கிழங்கை வேக வைத்து மேல் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம், மிளகாயை எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும்.

மிக்சியில் வதங்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், மிளகு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அனைத்தும் ஓரளவு அரைப்பட்டதும் கடைசியில் பனங்கிழங்கை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இப்போது சூப்பரான பனங்கிழங்கு துவையல் ரெடி.