தக்காளி ஜாம்.:

355

தேவையான பொருட்கள்.:
நன்கு பழுத்த பெங்களூர் தக்காளி- 6, சர்க்கரை- 100 கிராம்.

செய்முறை.:
வாயகன்ற பாத்திரத்தில் பழங்கள் மூழ்கும் அளவு தண்ணீரைக் கொதிக்கவைத்து, தக்காளிப் பழங்களை முழுதாக அதில் போடவும்.

தோல் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்துவிடவும்.

ஆறியதும் கைகளால் தோலை உரித்து, சர்க்கரை சேர்த்து நீர் விடாமல் மிக்ஸியில் அரைக்கவும்.

அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். கெட்டிப்பட ஆரம்பித்ததும் இறக்கவும்.

ஆறிய தும் ஃப்ரிட்ஜில் வைத்தால் 4, 5 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.