தக்காளி குருமா

735

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 2

தக்காளி – 2

சாம்பார் பொடி – 3/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/8 தேக்கரண்டி

உப்பு – தேவைக்கேற்ப

அரைக்கவும்

தேங்காய் துருவல் – 1/4 கப்

பச்சை மிளகாய் – 5

சோம்பு – 1/2 தேக்கரண்டி

பொட்டுக்கடலை – 1 மேஜைக்கரண்டி

தாளிக்க

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

பட்டை – 1 சிறிய துண்டு

கிராம்பு – 2

செய்முறை:

தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

டாயில் எண்ணெய் சூடாக்கி, பட்டை கிராம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

பொடியாக நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி குழைந்தவுடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்த தேங்காய் மசாலாவை ஊற்றி, 1 & 1/2 தண்ணீர் சேர்த்து, உப்பு சரி பார்த்து 3-4 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

சப்பாத்தி, பூரி, இட்லி தோசை எதனுடன் வேண்டும் என்றாலும் பரிமாறலாம்.