தூதுவளை கீரை குழம்பு

41

தேவையான பொருள்கள்:
தூதுவளை இலை – 2 கப், நறுக்கிய உருளை கிழங்கு – 1, பூண்டு – 5 பல், நறுக்கிய வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, தேங்காய்ப்பால் – சிறிதளவு , கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், நல்லெண்ணை – 5 ஸ்பூன், மிளகாய் தூள் – 1 ஸ்பான், தனியா தூள் – 2 ஸ்பூன், மஞ்சள்தூள் – சிறிதளவு, புளி – சிறிதளவு , உப்பு – தேவையானவை
செய்முறை :
இலையை முள் நீக்கி நன்கு கழுவி கொள்ளவும். புளியைக் கரைத்து வைத்து கொள்ளவும். கடாயில் எண்ணைய் ஊற்றி சுடானதும் தூதுவளை கீரையை வதக்கி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு அதே எண்ணெயில் கடுகு , வெந்தயம் போட்டு தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் ,உருளை கிழங்கு சேரத்து வதக்கி அதனுடன் கரைத்த புளியை ஊற்றி
இத்துடன் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து அதனுடன் வதக்கி வைத்த இலை சேர்த்து கொதிக்க விடுங்கள்.
ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பால் விட்டு நன்கு கொதித்ததும் இறக்கவும்.சுவையான மணமான தூதுவளை குழம்பு ரெடி.