வெண்ணிலா கேக்

257

தேவையானவை

மைதா மாவு – 1/2 கப்
பொடித்த சக்கரை – 1/2 கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
உருக்கிய வெண்ணெய் – 1/2 கப்
வெண்ணிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்
கண்டென்ஸ்ட் மில்க் – 3/4 கப்
பால் – 1 கப்

ஒரு பவுலில் மைதா மாவு, பொடித்த சக்கரை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து கலவை மாவினை தயார் செய்து கொள்ளுங்கள்.

பிறகு மிக்சியில் உருக்கிய வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் மற்றும் கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து 30நொடிகள் மட்டும் அதை மிக்சியில் சுற்ற வேண்டும்.

பிறகு அதனுடன் பால் சேர்த்து 1 நிமிடம் வரை நன்றாக மிக்சியை சுற்ற வேண்டும். பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மாவினை கொஞ்சம் கொஞ்சமாக இதனுடன் சேர்த்து சுற்ற வேண்டும்.

பிறகு முழுவதும் மாவு காலி ஆகும் வரை இவ்வாறாக செய்து அதனை மிக்சியில் இருந்து எடுத்து எண்ணெய் தடவிய பெரிய கேக் டின்னில் ஊற்ற வேண்டும்.

பிறகு எண்ணெய் தடவிய அந்த கேக் டின்னை விசில் போடாத குக்கரில் வைத்து 5 நிமிடங்கள் அதிக தீயில் வைக்க வேண்டும்.

பிறகு மிதமான தீயில் 45 முதல் 50 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். 50 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்தால் சுவையான வெண்ணிலா கேக் தயார்.