வரகு அரிசி சீவல்

268

தேவையான பொருட்கள்.:
வரகு அரிசி மாவு – ஒரு கிலோ,
கடலை மாவு – 100 கிராம்,
உப்பு, மிளகாய்த் தூள்,எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை.:
வரகு அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இந்த மாவுடன் கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பிசையவும்.

பிறகு, இந்த சீவல் போடும் பெரிய அளவிலான ஓட்டை உடைய கரண்டியில் மாவைவைத்து, கைகளால் தேய்த்துக் காயும் எண்ணெயில் போட்டு, பொன் நிறமாக எடுக்கவும்.

காரம் தேவைப்பட்டால், பொரித்த சீவலின் மேல், மசாலாவைத் தூவிக்கொள்ளலாம்.

பலன்கள்.:
கோதுமையைவிட இதில் நார்ச்சத்து அதிகம்.

தானியங்களுடன் ஒப்பிடுகையில், இது அதிகச் சத்துக்கள் நிறைந்தது.

மாவுச்சத்தும் குறைவாகக் காணப்படுவதால், உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. எளிதில் செரிமானம் அடைவதுடன், உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும்.