வெரைட்டி கீரை சட்னி

276

தேவையான பொருட்கள்.:
புதினா, பாலக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
சாம்பார் வெங்காயம் – நான்கு,
காய்ந்த மிளகாய் – ஒன்று, உளுத்தம்பருப்பு – 4 டீஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:
புதினா, பாலக்கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.

உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து அரைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

குறிப்பு.:
இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது இந்த சட்னி.