வாழைப்பழ சப்பாத்தி

412

தேவையானவை
வாழைப்பழம் – 2-3 கோதுமை மாவு – 3 கப் காய்ச்சிய பால் – 1 கப் பொடித்த சர்க்கரை – 2 டீஸ்பூன் எண்ணெய் – சிறிதளவுசெய்முறை
வாழைப்பழத்தை உரித்து, நறுக்கி அதனுடன் தேவையான பால், சர்க்கரை சேர்த்து அரைக்கவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதில் அரைத்து வைத்த வாழைப்பழ கூழ் போடவும். தேவைப்பட்டால் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போல பிசையவும். சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல திரட்ட வேண்டும். சூடான தவாவில் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். சுவையான வாழைப்பழ சப்பாத்தி தயார். குறிப்பு: 1 வயது + குழந்தைகளுக்கு, சர்க்கரை சேர்க்கலாம். ஒரு வயது கீழ் உள்ள குழந்தைகளுக்கு சர்க்கரை சேர்க்க வேண்டாம். 9+ மாத குழந்தைகள் முதல் இதை செய்து கொடுக்கலாம்.பலன்கள்
பொட்டாசியம் சத்து அதிகம். காலை நேர டிபனாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். உடல் எடை அதிகரிக்கவும் உதவும். நீண்ட நேரம் பசி தாங்கும். இனிப்பு சுவை உள்ளதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.