வாழைத்தண்டு ரசம்

403

தேவையான பொருட்கள்.:
வாழைத்தண்டு (சிறியது) – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
ரசப்பொடி – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
எலுமிச்சைப் பழம் – அரை மூடி (சாறு எடுக்கவும்),
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை, தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்), வெந்தயப்பொடி, கடுகு – தலா அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை.:
துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவைத்து மசிக்கவும்.

பாதி வாழைத்தண்டை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுக்கவும்.

பருப்புடன் வாழைத்தண்டு சாறு, தக்காளி, மீதமுள்ள வாழைத்தண்டு, உப்பு, பெருங்காயத்தூள், ரசப்பொடி சேர்த்து நன்கு கரைத்துக் கொதிக்கவிடவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயப்பொடி தாளித்து ரசத்தில் சேர்த்து ஒரு கொதிவிட்டு, எலுமிச்சைச் சாறு கலந்து இறக்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.