தர்பூசணியில் அல்வா

379

தர்பூசணி சதைகளை எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள். அவற்றை மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைத்து வைத்துக்
கொள்ளுங்கள்.

தர்பூசணி சீசன் என்பதால் அனைவரும் வெயில் வெப்பத்தை தணிக்க தர்பூசணி சாப்பிடுவீர்கள். அதை சிலர் அப்படியே சாப்பிடலாம். ஜூஸ் போட்டு குடிக்கலாம். ஆனால் இப்படி
அல்வா செஞ்சு சாப்பிட்டிருக்கீங்களா..? செஞ்சு சாப்பிட இதோ ரெசிபி.

#தேவையான_பொருட்கள் :

தர்பூசணி சதை – ஒரு கப்
நெய் – 2 – 3 tsp
சர்க்கரை – 2 கப்
ரவை – 1 tsp
கடலை மாவு – 1 tsp
ஏலக்காய் பொடி – 1/2 tsp
பால் – 1 கப்
பாதாம் , முந்திரி –
தே. அளவு

#செய்முறை :

தர்பூசணி சதைகளை எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.

அவற்றை மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் அரைத்து வைத்துக்
கொள்ளுங்கள்.

கடாயில் நெய் ஊற்றி ரவை மற்றும் கடலை மாவு இரண்டையும் பொன்னிறமாகும் வரை பிறட்டவும்.

பின் அரைத்த தர்பூசணியை ஊற்றி கிளறுங்கள்.

அடுத்து #சர்க்கரை காய்ச்சிய பால் ஆகிவற்றை ஊற்றி கிளறவும்.

தேவையான அளவு கெட்டிப்பதம் வந்ததும் அனைத்துவிடுங்கள்.

அடுத்ததாக கின்னத்தில் நெய் ஊற்றி முந்திரியை தாளித்து அல்வாவில் ஊற்றவும். அவ்வளவுதான் தர்பூசணி அல்வா தயார்