டூட்டி ப்ரூட்டி

254

தர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தூக்கி போட்டு விடுவோம்…

இனி தோலை தூக்கி போட வேண்டாம்… தோலை வைத்து இந்த டூட்டி ப்ரூட்டி செய்து கேக், பண், ஐஸ்கிரீம் இன்னும் பல இனிப்பு வகைகளில் இதை சேர்த்து செய்யலாம்…

தேவையான பொருட்கள்:

1 கப் நறுக்கிய தர்பூசணி தோல்
11/2 கப் சர்க்கரை
1/2 ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
1/2 ஸ்பூன் ரோஸ் எசன்ஸ்
பச்சை நிற புட் கலர் சிறிது
சிகப்பு நிற புட் கலர் சிறிது

செய்முறை:

முதலில் தர்பூசணி தோலில் உள்ள பச்சை நிற தோலை நீக்கி உள் பகுதியில் உள்ள சிவப்பு நிற பழத்தையும் நீக்கி நடுவில் உள்ள வெள்ளை பகுதியை மட்டும் பொடியாக நறுக்கி கொள்ளவும்

நறுக்கியதை அரை பதம் வரும் வரை வேகவைக்கவும்

வெந்ததும் தண்ணீரை வடித்து விடவும்

சர்க்கரை 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.. சர்க்கரை கரைந்தவுடன் அதில் வேக வைத்துள்ள தர்பூசணியை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்

பிறகு அதை மூன்றாக பிரித்து அதில் விருப்பப்பட்ட புட் கலரை சேர்த்து கலந்து கொள்ளவும்

அதில் விருப்பப்பட்ட எசன்ஸ் கலந்து 5 லிருந்து 6 மணி நேரம் சர்க்கரை பாகில் ஊற விடவும்

பிறகு தண்ணீரை வடித்து நிழலில் உலர்த்தவும்…

தண்ணீர் நன்றாக காய்ந்தவுடன் அதை காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிஜ்ஜில் வைத்து தேவை படும் போது எடுத்து கொள்ளலாம்…

சுவையான தர்பூசணி டூட்டி புரூட்டி தயார்…