சக்தி அம்மாவின் 40-வது ஜெயந்தி

0 66

வேலூர், ஜன.4: வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீட நிறுவனர் சக்தி அம்மாவின் 40-வது ஜெயந்தி விழா நாராயணி பக்தர்களால் சிறப்பாக நடத்தப்பட்டது.

விழாவில் பீகார் மாநில கவர்னர் ராம்நாத்கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து சக்திஅம்மாவின் அருளுரை தொகுப்பு நூலினை வெளியிட்டார். இதில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் துறை இணை அமைச்சர் விஜய்சம்பலா மற்றும் காமாட்சிபுரி ஆதினம், வாலாஜா தன்வந்திரி பீடத்தின் ஸ்ரீமுரளிதரன் சுவாமிகள் உள்ளிட்ட பீடாதிபதிகள், பிஜேபி தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தினர். வேலூர் ஸ்ரீபுரம் மற்றும் ஸ்ரீநாராயணி பீடத்தின் நிறுவனர் சக்தி அம்மாவின் 40-வது ஜெயந்தி விழா நாராயணி பக்தர்கள் மற்றும் ஸ்ரீராம பக்த சேவா சங்கத்தினரால் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

இந்த விழாவையொட்டி ஸ்ரீநாராயணி வித்யாலயா பள்ளியிலிருந்து ஸ்ரீராம பக்த சேவா சங்கத்தினர் மற்றும் ஸ்ரீநாரயணி பக்தர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடத்தப்பட்டது.இதில் சக்தி அம்மாவின் உருவ சிலை வைக்கப்பட்ட ரதம் யானை, குதிரை முன்னே செல்ல தாரை, தப்பட்டை, மேளதாளங்கள், வாத்தியங்கள் முழங்க விழா நடைபெறும் அரங்கை அடைந்து. அதனை தொடர்ந்து நடை பெற்ற ஜெயந்தி விழாவிற்கு வருகை தந்தவர்களை பீடத்தின் டிரஸ்டி ராஜம்மாள் வரவேற்றார். அதை தொடர்ந்து புனித நீராலும் பல வகை மலர்களாலும் சக்தி அம்மாவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் வழங்கல் இனணஅமைச்சர் விஜய்சம்லா பங்கேற்று வாழ்த்தி பேசினார். விழாவில் பீகார் மாநில கவர்னர் ராம்நாத்கோவிந் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி ஜெயந்தி விழாவை தொடங்கிவைத்து சக்தி அம்மாவின் அருளுரைகளின் தொகுப்பு நூலினை வெளியிட்டு பேசியனார்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.