பூஜைக்கு நேரமாகிவிட்டது..பூஜைக்க நேரமா? இதுதான் பூஜை

0 1,181

பூஜைக்கு நேரமாகிவிட்டது..பூஜைக்க நேரமா? இதுதான் பூஜை

ஒரு சமயம் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா தஞ்சை மாவட்டத்தில் யாத்திரை சென்றபோது குடவாசலிலிருந்து கொரடாச்சேரிக்குச் சென்றுகொண்டிருந்தார்…. செல்லும் வழியில் திருக்களம்பூர் என்ற பாடல் பெற்ற சிவ ஸ்தலத்திற்குக் கிழக்கே சாலை ஓரத்தில் அந்த சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஹரிஜன மக்கள் யாவரும் ஸ்ரீ மாஹா பெரியவா ஸ்வாமிகளை தரிசிப்பதற்காகக் குழுமியிருந்தனர்.

அப்படிக் கூடியிருந்த அம்மக்கள் தங்கள் பகுதியில் வசூல் செய்த சிறு தொகையுடன், பழம் மற்றும் விதவிதமான பூக்கள் முதலியவற்றையும் ஸ்ரீ மஹா ஸ்வாமிகளுக்குச் சமர்ப்பிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ மஹா பெரியவா அவர்கள் அனைவரையும் ஆசீர்வத்தார். அந்த எளிய மக்கள் தமக்கு சமர்பித்தக் காணிக்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்… அவர்கள் அளித்த பொருட்களை பார்த்து வியந்தார். உடனடியாக அவ்விடத்திலேயே அவர்கள் யாவருக்கும் வேஷ்டி, புடவைகள் வாங்கிவர தம்முடன் வந்திருந்த காஞ்சி மடத்தின் சிப்பந்திகளுக்கு உத்திரவிட்டார். பெரியவா சொன்னதுபோது வேஷ்டி, புடவைகள் வாங்க உள்ளூரில் கடைகள் கிடையாது. அதனால் மடத்தின் சிப்பந்திகள் குடவாசலுக்கு சென்றனர்.

சென்றவர்கள் திரும்பிவர அதிக நேரமாகுமே… அவர்கள் வந்தபிறகு வாங்கு வந்த வேஷ்டி, புடவைகளை அப்பகுதி மக்களுக்கு விநியோகம் செய்துவிட்டு, மஹா பெரியவா அடுத்த முகாமுக்குச் சென்று பூஜை முடிப்பதென்றால் அந்தி நேரமாகிவிடுமே! பெரியவா அதன்பிறகுதானே ஆகாரம் கொள்வார்கள்…?

பெரியவாவுடன் வந்திருந்த மற்றவர்கள் இப்படி எண்ணமிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பெரியவா இதைப் பற்றியெல்லாம் துளியும் எண்ணியதாகத் தெரியவில்லை…. அவர் தம்மை தரிசிப்பதற்காக வந்திருவர்களுடன் அன்போடு பேசிக்கொண்டிருந்தார்.

மாலை நேரத்தில் புடவை, வேஷ்டிகள் அவ்விடம் வந்து சேர்ந்தன. அவைகளை தம்மை காண வந்தவர்களுக்கு விநியோகம் செய்தார் பெரியவா. அந்த ஏழை மக்கள் தங்களுக்கு பெரியவா அளித்த புடவை, வேஷ்டிகளை ஆனந்தத்துடன் பெற்றுக்கொண்டனர்.

மற்றவர்களுக்கு கொடுப்பதில்தான் எத்தனை சுகம். ஆனந்தத்தின் எல்லைக்கேச் சென்றார் பெரியவா. “பூஜைக்கு நேரமாகிவிட்டது… என்றார் காஞ்சி மட சிப்பத்தி ஒருவர். ஸ்ரீ பரமாச்சாரியார் தம்மை சுற்றிருந்த ஏழை மக்களையெல்லாம் அன்புடன் நோக்கினார் பிறகு தம்மிடம் பூஜையைப் பற்றி நினையூட்டிய சிப்பந்தியை தமது ஒளிமிகுந்த கண்களால் பார்த்தார்.

பிறகு மெல்லியக் குரலில்… “பூஜைக்கா… நேரமா? இதுதான் பூஜை” என்றார். இதற்கு மேலாக ஒரு தத்துவத்தை தம்முடைய வாழ்நாளில் எந்த சாஸ்திரத்திலும் படித்ததில்லை…. ஸ்ரீ ஆச்சாரியர்களை எண்ணும்போதெல்லாம் இந்த அருள்வாக்கே மகா மந்திரம்போல் மனசின்முன் நிற்கிறது. (நன்றி: சங்கரிபுத்திரன்)

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.