ஜடா முடியும் ஆன்மிகமும்!

0 286

சித்தர்கள், முனிவர்கள், அல்லது ஆன்மிகத்தில் ஓர் அளவு துவக்கத்தில் உள்ளவர்கள் என அனைவருமே முடியை நீண்டு விடுகின்றனரே? இது ஏன்? என்ற கேள்வி நம்மில் பலருக்கு தோன்றி இருக்கும்.

உலகத்திற்கே ஒருமையின் பாதைக்கு “அஷ்டாங்க யோகம்” என்னும் பொக்கிஷத்தை அளித்த இந்திய மண்ணில் தோன்றிய தவப்புதல்வர்கள் செய்த அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்று இன்று நாம் மேற்கத்திய அறிவியலாளர்களின் வாயிலாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

84 லட்சம் யோனிகளில் பரிணமித்து, மனித பிறவியில் முதுகு தண்டுவடம் நேராக அமைய பெற்ற உடல் வாகை, பகுத்தறிவை கொண்ட ஒரு உயிரினமாக நாம் பிறவி எடுத்ததின் நோக்கமே இட கால வெளியை கடந்து (space – time ) ஒருமையில் பூரணமாக இருக்கும் சிவத்தை அடையத்தான்.(அகத்தியர் தனது பாடல் ஒன்றில் சிவத்திற்கு மேல் “த்வாத சாந்தம்” என்னும் ஒரு நிலை உள்ளதாக புலத்தியரிடம் கூறுகிறார்”).

ஒவ்வொருவருள்ளும் இருக்கும் இந்த “நான்” என்னும் உணர்வை உடல் சார்ந்த தலைகளிருந்து விடுவித்து பேரண்ட உணர்வாக வியாபகப்படுத்த, நம் நாட்டில் தோன்றிய சித்த புருஷர்கள் தங்கள் உடலை ஒரு அதி-முக்கியமான கருவி என்று அறிந்துனர்ந்தனர். காலம்,வெளி உடல் இவற்றை ஆயுதமாக கொண்டே இருமையை வென்று அடுத்து வரும் பல லட்சம் யோனி பிறப்புகளை வெல்ல முடியும் என்று அறிந்தனர். அதன் ஒரு பாகமாக தங்களது தலை முடிகளை வெட்டாமல் நீண்டு ஜடா முடி வருமாறு வளர்தினர்.

முடி பொதுவாகவே உள் நரம்புகளின் நீட்சி. ஒரு தகவல் கிரகிப்பு சாதனம் போல் செயல் பட்டு, தான் இருக்கும் சூழ்நிலையின் அமைப்பை அதன் சக்தி பரிணாம அமைப்பை கிரகித்து கொள்ளும் ஆற்றல் பெற்றது.

பொதுவாக நுண்-இயற்பியல்( quantum physics ) துறையில் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட விதி என்னவெனில் “A particle doesn’t have any energy on its own except that which is borrowed from the environment “. அதாவது ஒரு தனித்த துகள் தன்னளவில் சக்தியற்றது; அது இருக்கும் சூழ்நிலையில் இருக்கும் சக்தியை ஈர்த்துக்கொண்டு தான் சக்தி பெறுகிறது. சித்தர்கள், காடுகளையும் மலைகளையும் தேடி ஓடிய காரணமும் இது தான்.

அந்த சூழ்நிலையில், சுற்று புறத்தில் உள்ள தூய ப்ராணா சக்தியை தங்களது ஜீவ காந்த சக்தியாக உட்கிரகித்து, அதன் மூலம் தங்களது ஆன்ம பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தினர்.

நீண்டு இருக்கும் ஜடா முடி, சக்தி கிரகிப்பு செய்வதோடு intuition எனப்படும் உணர்வை பெருக்குகிறது. இதன் மூலம், இட-கால வெளியை ஒரே பிறவியில் சுருட்டி மூடி எல்லையற்ற பெரு வெளியை தீர்த்துகட்டுவதற்கான ஆற்றல் பெருகுகிறது.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.