ஜெகத் குரு ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை

0 730

ஸ்ரீ மஹாபெரியவா நவரத்தின மாலை

 

ஞாலங் காக்கும் உமையாள் பதியோன்

ஞானக் குழந்தை வடிவா னழகன்

ஞாலம் உடைசால் தொந்தியன் அருளில்

ஞானக் குருவை போற்றிடு வோமே! (1)

“சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்”

பூக்கும் புலர் காலையில் தினமும்

நோக்கும் விழி யாலருளும் பதியாம்

வாக்கில் அறமும் உடைசால் குருவாய்

காக்கும் கருணா நிதியே சரணம்! (2)

“சந்திர சேகர குருவே சரணம்…”

தேறா தெதுவும் தேறித் தெளிய

தாரா வரமும் தந்தெமைக் காக்க

நாரா யணனாய் நரணெனக் கருளும்

பாதாம் புயமுடை பதியே சரணம்! (3)

“சந்திர சேகர குருவே சரணம்…”

மூவாப் பிணியும் வெகுண்ட துமோட

காணா தெதுவும் தீண்டா தருள

தீராத் துயரும் தீர்த்தருள் பெறவே

கோணா வாழ்வின் நிதியே சரணம்! (4)

“சந்திர சேகர குருவே சரணம்…”

சாடா வாழ்வில் நாணமும் பேதமும்

நாடா தருள்வாய் நலம்பல தருவாய்

கூடா நட்பின் குறையும் களைந்தே

வாடா வாழ்வருள் கதியே சரணம் ! (5)

“சந்திர சேகர குருவே சரணம்…”

சூரர் வினையும் சூழா தருளும்

தீரர் திருத்தாள் பணிந்தேத் துவமே

வீரத் தெழிலாய் வதனந் தருவாய்

வீழா வாழ்வருள் திருவே சரணம்! (6)

“சந்திர சேகர குருவே சரணம்…”

சூலம் கொண்டருள் சுந்தரி எந்தரி

தூலம் காத்திடும் தூயநற் சங்கரி

நாளும் எமைகாத் தருளும் பதமும்

நல்கும் காஞ்சிநற் குருவே சரணம்! (7)

“சந்திர சேகர குருவே சரணம்…”

நேயம் கொண்டிட நெறிதந் தவராய்

காயம் திரித்தே தவமேற் பதியாய்

மாயம் எதுவென மதிதந் தருள்வாய்

தாயம் தந்தருட் தருவே சரணம்! (8)

“சந்திர சேகர குருவே சரணம்…”

காலம் எல்லாம் கதியாய் நின்னருட்

கோலம் மனதுள் தியானித் தனமே

நாளும் இனியாம் நல்லன கொண்டிட

தாளும் பணிந்தோம் சசி சேகரனே! (9)

“சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்

சந்திர சேகர குருவே சரணம்”.

 

எல்லாம் வல்லதொரு பேரிறையாய் நமக்கெல்லாம் அருள்பாளித்து வரும் ஸ்ரீசரணாளின் க்ருபைதனிலே எல்லோரும் இன்புற்று வாழ அனுதினமும் அவரது கமலபாதங்களில்  வீழ்ந்து நமஸ்கரித்து ப்ரார்த்திப்போமாக!

Courtesy: சாணு புத்திரன்

குருவருள் நம்மை குறையின்றி காக்கும் சத்தியம் உணர்வோம்!

குருவுண்டு – பயமில்லை; குரையேதும் இனியில்லை!

பெரியவா கடாக்‌ஷம்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.