கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள்

0 81

இயற்கை கொடுத்த மூலிகை மருந்துகளில் கருஞ்சீரகம் மிக முக்கியமானது.உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இது நூற்றுக்கும் மேலான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இன்னும் கூட இதை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. அந்த ஆராய்ச்சிகளின் விளைவாக இன்னும் பலப் பல வியாதிகளுக்கு இந்த கருஞ்சீரகத்தின் துணையுடன், மருந்துகள் கண்டுபிடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கணைய புற்றுநோய் (ப்யாங்க்ரியாடிக் க்யாந்ஸர்)அத்தனை எளிதில் அறிகுறியும் தென்படாமல், வந்த பின் குணப்படுத்த மிகவும் கடினமான வியாதி. இப்படிப்பட்ட மருத்துவத்திற்கு சவாலான கணைய புற்றுநோயை கட்டுப்படுத்த கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது.

உடலுக்கு தேவையான பிராணசக்தி குறையும் போது உடலுக்குள் உறைந்திருக்கும் கேன்சர் செல்கள் பல்கி பெருகி வளர்ச்சி அடைகின்றன.. கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான பிராண சக்தி, எதிர்ப்பு சக்தியை பெருக்குவதுடன், இயற்கை நச்சுயிரிப் பெருக்கத் தடுப்புப் பொருளாகவும், எலும்பு மஜ்ஜை உற்பத்தி சீராக இயங்க வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவை சமன் செய்யவும் பேருதவி புரிகிறது..

மேலும் இதில் உடலுக்கு தேவையான பலவித அமிலங்களான மிரிஸ்டிக் அமிலம், பாமிற்றிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், ஒலீயிக் அமிலம், லினோலியிக் அமிலம், ஒமேகா-6 ஃபேட்டி அமிலம், ஃபோலிக் அமிலம் போன்றவற்றை உள்ளடக்கியது. மற்றும் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின்கள் ப்1, வைட்டமின்கள் ப்2, வைட்டமின்கள் ப்3 போன்ற சத்துக்களை உள்ளடக்கிய அறிய மூலிகையே இந்த கருஞ்சீரகம்.

அஜீரணம், இருமல், வாந்தி, வாயு, வீக்கம் போன்றவற்றை குணமாக்கும். பசியைத்தூண்டும், வயிற்றுப் போக்கை நிறுத்தும், புழுக்கொல்லியாக செயல்படும். இதயத்தில் உண்டாகும் வலியைக் குறைக்கும். சிறுநீர் சுரப்பிகளை தூண்டும். முகப்பருவை அறவே போக்கும். கரப்பான், சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் நோய்களைத் தீர்க்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் அதிகம் சுரக்க வைக்கும், பிரசவத்திற்கு பின் உண்டாகும் வலிகளைக் குறைக்கும் ஆற்றல் பெற்றது. கீல் வாதம், தலைவலி, நாய்க்கடி, கண்வலி, கபம், குளிர் காய்ச்சல், குறட்டை, மூக்கடைப்பு ஆகியவற்றுக்குக் கருஞ்சீரகம் நல்ல பலன் தரும். சிறுநீரக‌ கல்லைக் கரைத்து சிறுநீர் அடைப்பை அகற்றும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

சிறப்பு குறிப்பு: கருஞ்சீரகத்தை வறுத்துத் தூளாக்கி எண்ணெயில் ஊறவைத்து மூக்கில் இரண்டு அல்லது மூன்று சொட்டுகள் விட்டால் சளி தொல்லையிலிருந்து உடனடி நிவராணம் பெறலாம்.

பல வியாதிகளுக்கு கருஞ்சீரகம் ஒன்றே அருமருந்து. அருமருந்தான கருஞ்சீரகத்தை நாமும் நம்முடைய சமையலறையில் அமர்த்தி நோய்களின் வரவை தடுக்கலாமே.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.