அகத்தியரை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

776

அகத்தியரை வழிபட்டால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சித்தர்களுக்கு எல்லாம் முதன்மையானவர் அகத்தியர். தமிழ் இலக்கணம் வகுத்துக் கொடுத்தவர். ஞானத்திற்கும், அறிவிற்கும் அதிபதி. தேவர்களை எல்லாம் காத்து நின்றவர். சிவனின் வழிபாட்டு தலமாக உள்ள வடக்கில் சிவனை காண்பதற்கு அலைகடலென்று மக்கள் திரண்டதால், தென் பகுதியை காக்க அகத்திய முனிவர் வந்துள்ளார் என்று வரலாறு கூறுகின்றது. அகத்தீயை அடக்கியவர், வாதாபியை தோற்கடித்தவர் என்று வேதங்கள் மற்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

அகத்தியரை வழிபட என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

  1. குழந்தைகளுக்கு கல்வி, ஞானம் கூடும்.
  2. மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்கள் பெறலாம்.
  3. போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.
  4. குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும்.
  5. பணிகளில் முன்னேற்றம் உண்டாகும்.
  6. எதிரிகளை எளிதில் வெல்ல முடியும்.
  7. வாழ்க்கையில் உயர்வு, தாழ்வு வரும் போது மனதில் மாற்றங்கள் இல்லாமல் நம்மை காத்தருள்வார்.

இத்தகைய சிறப்புமிக்க அகத்தியரை அவரது ஜெயந்தி நாளில் பூஜை செய்து வழிபாடு செய்யலாம். மேலும், ஒவ்வொரு பௌர்ணியும், சனி மற்றும் வியாழக்கிழமைகளில் அகத்தியரை வழிபடலாம்.