அப்பா, அம்மாவுக்காக பிச்சை எடுத்த சட்டை முனி சித்தர்!

405

பசியால் வாடிய பெற்றோர்: பிச்சை எடுத்த சட்டைமுனி சித்தர்!

தனது அப்பா, அம்மாவின் பசியைப் போக்க சட்டைமுனி சித்தர் பிச்சையெடுத்து காப்பாற்றினார்.

சித்தர்களில் 18 சித்தர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள். ஏனென்றால் அறிவியல், பிரபஞ்ச ரகசியம், சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தையும் அறிந்து வைத்திருந்தனர். திருமூலர், பாம்பாட்டி சித்தர், போதகுரு, நந்தி தேவர், கமலமுனி, கொங்கணர் என்று இருக்கும் 18 சித்தர்களில் சட்டைமுனி சித்தரும் ஒருவர். இவரைப் பற்றித் தான் இன்றைய பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

மேலும் வாசிக்க: கடன் தீர மிளகு, வரமிளகாய் உடன் சிவன் தரிசனம்!

சட்டைமுனி சித்தர் ஆவணி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரம் 3ஆம் பாவத்தில் பிறந்தார். சட்டைமுனி இலங்கையைச் (சிங்கள) சேர்ந்தவர். இவரது தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். தாயார் ஆலய விழாக்களில் நடனம் ஆடுபவர். சிங்கள நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்தனர். தமிழகத்தில் விவாசயம் செய்து வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் வானம் பொய்த்துப் போகவே பிழைப்புக்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்த பெற்றோரை காப்பாற்ற கோயில் வாசலில் யாசகம் ஏந்தி பெற்றோரை காப்பாற்றி வந்தார்.

தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்: விஷத்தை முறிக்கும் கருடாழ்வார் மந்திரம்!

அப்படி ஒரு நாள் கோயில் வாசலில் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்த போது, சங்கு பூண்ட ஒரு முனிவரை பார்த்தார். அவரிடம் தனது கஷ்டங்களை எல்லாம் கூறி அழுதார். அதற்கு முனிவரோ அனைத்துமே விதியின்படி தான் நடக்கும். பெற்றோரை காப்பாற்ற நீ செய்யும் செயல் புண்ணியம் நிறைந்தது. சிவனை நினைத்து வழிபாடு செய். உனது நிலை மாறும் காலம் வரும் என்றார்.

சங்கு பூண்ட முனிவர் கூறியதைப் போன்று மழை பொழிந்து விவசாயம் செழித்தது. சட்டை முனியும் கடுமையாக பாடு பட்டு, விவசாயம் செய்து நல்ல நிலைக்கு வந்தார். அதன் பிறகு தன்னால் முடிந்த உதவிகளை பிச்சைக்காரர்களுக்கு செய்து வந்தார். திருமணமும் செய்து கொண்டார். ஆனால், இல்லற வாழ்வில் பற்று இல்லாமல் இருந்தார். தினமும் சிவனை வழிபட்டு வந்தார்.

இதையும் படிங்க: பேசும் தெய்வம் பிரகதாம்பாள்!

ஒரு நாள் இறைவனை வழிபட்டு தனது சட்டையை அணிய முற்பட்ட போது, வெளியில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது வேறு யாருமில்ல, சங்கு பூண்ட முனிவர் தான். அவர் பாதம் தொட்டு வணங்கினார். என்ன சட்டை முனிவரே, எம்மோடு வாரும் என்று அழைத்துச் சென்றார். அப்போது அவர் சட்டை அணியவில்லை. சட்டையை உதறித் தள்ளினார்.

அதன் பிறகு எப்போதும் கம்பளியை அணிந்திருந்ததால், கம்பளி சட்டை முனிவர் என்றும், கயிலாயச் சட்டைமுனி நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். சங்கு பூண்ட முனிவருடன் இணைந்து ஆகாயத்தில் பறந்தார். முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடன் சுற்றி வந்து போகரைச் சந்தித்து ஞான உபதேசம் பெற்றார்.

மேலும் படிக்க: 6 அடி உயரத்தில் காட்சி தரும் பிள்ளையார்பட்டி விநாயகர்!

அகத்திய முனிவரிடம் சீடராக சேர்ந்து ஞானம் பெற்று, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். அதன் பின், சிவனை நினைத்து கடும் தவம் புரிந்து அவரைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றார். ஊர் ஊராகச் சுற்றி வரும் போது தூரத்தில் திருவரங்கர் கோயில் கலசங்களைக் கொண்டு ஆனந்தம் கொண்டார்.

அதன் பின், கோயில் நடை அடைப்பதற்குள் திருவரங்கர் கோயிலுக்கு சென்று ஸ்ரீ ரங்கநாதனை தரிசனம் செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டு அங்கு சென்றார். ஆனால், கோயிலுக்கு செல்வதற்குள் நடை சாத்தப்பட்டுவிட்டது. கோயில் வாசலில் நின்று ரங்கா ரங்கா ரங்கா என்று சத்தமாக வேண்டினார். கோயில் நடையும் திறந்தது. சட்டை முனிக்கு ரங்கநாத சாமியின் தரிசனம் கிடைத்தது.

இதையும் வாசிக்க: இந்த ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் பொன்னான மாதம்!

அப்போது ரங்கநாதனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக சட்டை முனிவரின் உடலில் சேர்ந்தது. ரங்கா ரங்கா என்று சட்டை முனி கதறிய சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கம் மக்கள் அங்கு கூடினர். அப்போது, சட்டை முனியின் கழுத்தில் இருந்த ஆபரணங்களைப் பார்த்து மக்கள் அவரை திருடனாக எண்ணி மன்னரிடம் முறையிட்டனர்.

இதில் அதிர்ச்சியடைந்த சட்டை முனி, மக்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டி ரங்கநாதனிடம் வேண்டினார். வளமுடன் வாழ வேண்டும் என்பதற்காக மக்களுக்கு புரியும் படி அவர்களது பாஷையில் பல குறிப்புகளை எழுதி வைத்தேனே! நானா திருடன். கயிலை மலையிலே சிவபெருமானை காணச் செல்லும் குளிராக இருக்கும் என்பதற்காக கம்பளி சட்டை அணிந்து சென்றேனே.

மேலும் வாசிக்க: திருநீறில் அறிவியல் உண்மையா? அது எப்படி?

அதன் பிறகு கம்பளி சட்டையை எங்கு சென்றாலும் அணிந்து செல்கிறேன். இந்த கம்பளி சட்டையைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லையே! அப்படிப்பட்ட என்னை இவர்கள் திருடர்கள் என்கிறார்களே! இவர்களிடம் நடந்தது என்ன என்பதை புரிய வை என்று கதறினார். அப்போது பூட்டியிருந்த கதவுகள் தானாக திறந்து ஊர் மக்களுக்கு புரிய வைத்ததோடு அல்லாமல் மன்னனுக்கும் புரிய வைத்தார் ரங்கநாதர்.

அப்போது அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த போதே ரங்கநாதனுடன் ஒன்றாய் கலந்தார் சட்டை முனி. திருவரங்கத்தில் சித்தரின் சமாதி இன்றும் இருப்பதாக கூறப்படுகிறது.