கழுகுமலை மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதி!

607

கழுகுமலை மிளகாய்ப்பழ சித்தர் ஜீவசமாதி!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை பகுதியில் வாழ்ந்து சித்தியடைந்தவர் மிளகாய்ப்பழ சித்தர். கிட்டத்தட்ட 450 வருடங்களுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்தவர் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி அமாவாசை அன்று சித்தரின் குருபூஜை கொண்டாடப்படுகிறது.

தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மிளகாய் ஒன்றை எடுத்து சித்தரை மனதில் வைத்துக் கொண்டு அந்த மிளகாயை தண்ணீர் போட்டு வைத்து மறுநாள் நோய் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு அந்த மிளகாய் தண்ணீரை குடித்தால் நோய் குணமாகும் என்பது ஐதீகம் என்று சொல்லப்படுகிறது.

கிட்டத்தட்ட 450 ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள் மூன்று கிழவன் வாழ்ந்து வந்தனர். அதில் கடைசி கிழவன் மிளகாய்பரதேசி. இவர், தனது 3 வயது இருக்கும் போது சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த காலத்தில் வெளியூர் செல்ல வேண்டுமென்றால் மாட்டு வண்டியைத் தான் பயன்படுத்துவார்கள். சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் போது அமாவாசை நாளன்று இரவில் இராஜபாளையத்திலிருந்து, திருவனந்தபுரத்திற்கு பருத்தி ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டியில் அயர்ந்து தூங்கி விட்டார்.

மாட்டு வண்டியோ பருத்தியை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் சென்றுவிட்டது. அப்போது, வண்டியிலிருந்த மிளகாய்பரதேசியை கீழே இறக்கிவிட்டு தம்பி யாரப்பா நீ என்று கேட்கவே, அவர் அழ ஆரம்பித்தார். அழுது கொண்டிருந்த மிளகாய்பரதேசியை அருகிலிருந்த பெரிய மந்திரவாதி தம்பி இங்கே வா, உனது பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு மிளகாய்பரதேசி என்று சொன்னார்.

அதன் பிறகு மிளகாய்பரதேசியை வீட்டில் வைத்து வளர்த்து வந்தார். அவருக்கு 3 வயது முதல் 8 வயது வரை மிளகாய்பரதேசிக்கு எல்லா மந்திரங்களையும், கூடு விட்டு கூடு பாயும் வித்தைகளையும், அந்த பெரிய மந்திரவாதி கற்றுக் கொடுத்தார். இதன் காரணமாக அந்த மந்திரவாதிக்கு தனது அனைத்து கடமைகளையும் மிளகாய்பரதேசி செய்தார்.

ஒருநாள் மிளகாய்பரதேசி ஊருக்கு போக வேண்டும், சொந்த பந்தங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அங்கிருந்து ஏடு மற்றும் காளியம்மன் தெய்வங்களை கொண்டு வந்தார். திருவனந்தபுரத்தில் அவர் இருந்த போது இங்கு பல சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டது. இராஜபாளையத்திற்கு வந்த மிளகாய்பரதேசி சொந்த பந்தங்களைப் பார்த்து கதறி அழுதார்.

கடைசியாக மாசி அமாவாசையின் போது சதுர குழி தோண்டி அதில், ஏடு மற்றும் திருநீர் ஆகியவற்றை உள்ளே வைத்து நான் ஜீவசமாதி அடைந்து விடுகிறேன். சமாதியின் மேல், பாவுகல்லை மூடிவிட்டு திரும்பிபார்க்காமல் அங்கிருந்து சென்றுவிடுங்கள். அவர் மூத்த கிழவனிடம் காரம் பசுமாடு, இரு வேல், அதில் ஒரு வெள்ளி வேல் பிரம்பு மற்றும் குடையில் நொண்டி காளியம்மனை கொடுத்து இந்த தெய்வங்களை வைத்து வழிபடுங்கள் என்று சொல்லி இனிமேல் இந்தப் பக்கமே வந்துவிடாதீர்கள் என்று கூறிவிட்டு ஜீவசமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது.