கோரிக்கையை வரமாக மாற்றித் தரும் ராஜரிஷி ஜீவசமாதி!

870

கோரிக்கையை வரமாக மாற்றித் தரும் ராஜரிஷி ஜீவசமாதி!

திருநெல்வேலி மாவட்டம் கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் தான் நெல் கட்டும் சேவல். இங்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் மன்னர் புலித்தேவர், நெல்கட்டும் சேவலை தலைநகரமாக கொண்டு ஆட்சி புரிந்தார்.

அவருடைய ஆட்சி காலத்தில் அவரது அக்கா மகனாக இருந்த ஒருவர் ராஜரிசியாகி வடக்கே காசியில் பல ஆண்டுகள் சிவதொண்டு புரிந்தார். தன்னிடம் இருந்த பல அற்புத தெய்வீக ஆற்றலை கொண்டு பலரது நோய்களை தீர்த்து வைத்தார். இறுதியாக அவர் நெல் கட்டும் சேவலுக்கு வருகை தந்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். இப்பொழுதும் கூட  ராஜரிஷி ராம பாண்டியன் ஜீவ சமாதியில் இருந்தவாறு  மிகவும் சிவ கடாட்சத்துடன்  அருளாட்சி புரிந்து வருகிறார்.

இங்கே தினமும் அறுசுவையுடன் கூடிய அன்னதானம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இதை வாசிக்கும் நீங்கள் எந்த நாளிலும் இந்த ஜீவசமாதிக்கு செல்லலாம. நீங்கள் மனப்பூர்வமாக இந்த ராஜரிஷி ராம பாண்டியன் அவர்களிடம் கோரிக்கை வைத்தால் அடுத்த சில நாட்களில் அது வரமாக மாறிவிடுகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான மக்களுக்கு தீராத பிரச்சனைகள் தீர்ந்துள்ளன.

வராத கடன்கள் வசூலாகி உள்ளது. பூர்விக சொத்து பிரச்சனைகள் சில நாட்களில் முடிவுக்கு வந்து பலர் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். பலருக்கு திருமண தடை நீங்கி நல்ல வாழ்க்கை துணை அமைந்திருக்கிறது.

வேறு சிலருக்கு நிரந்தரமான வேலை அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த ஜீவ சமாதியை அடைய சென்று அடைய விரும்பினால் சிவகிரிக்கும் கரிவலம் வந்த நல்லூருக்கும்  நடுவே கூடலூர் அருகில் இந்த ஜீவசமாதி அமைந்துள்ளது.

ராஜபாளையம் நகரில் இருந்து குற்றாலம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் சிற்றூர் சிவகிரி ஆகும். சிவகிரியில் இருந்து ராயகிரி வழியாக கூடலூர் என்ற கிராமத்தை சென்றடைய வேண்டும். இங்கிருந்து நெற்கட்டும் சேவல் செல்லும் வழியில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

ராஜபாளையம் நகரிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் கரிவலம் வந்த நல்லூர் என்ற கிராமத்தை சென்றடையலாம். அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கூடலூர் அமைந்திருக்கிறது. கூடலூரில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது. இந்த ஜீவசமாதியில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் நெற்கட்டும் சேவல் என்ற கிராமம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.