தலையில் சட்டி வைத்து வலம் வந்த ஸ்ரீ சட்டிசாமி சித்தர்!

322

தலையில் சட்டி வைத்து வலம் வந்த ஸ்ரீ சட்டிசாமி சித்தர்!

பழனியில், தலையில் சட்டி வைத்து கொண்டு வீதிகளில் வலம் வந்து, சட்டியில் உணவுகளை உண்டு மக்களுக்கு சேவை செய்த மகா சித்தர் யார்? பதிவை பொறுமையாக படித்து சித்தரின் ஆசிகளை பெறும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆம், அவர்தான் ஸ்ரீ சட்டிசாமி சித்தர் ஆவார்.

உடுமலை வட்டம், பொம்மு நாயக்கன் பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் நல்லிமுத்து கவுண்டர். இவர் செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். முருகன் மீது அளவற்ற பாசம் கொண்டவர். குருவைத் தேடி ஊர் ஊராய் திரிந்தார். பாண்டிச்சேரி மற்றும் சில ஊர்களுக்கு சென்றார். பாண்டிச்சேரி சித்தாண்டி மடத்தில் ஞானம் பெற்றார்.

இவருக்கு சட்டி சாமிகள் என எப்படி பெயர் வந்தது என்பதை பார்ப்போம். ஒரு சமயம் இவர் மழையில் நனைந்து கொண்டிருந்தார். அப்போது அதைப் பார்த்த ஒரு சிறுவன் தங்கள் வீட்டில் இருந்த சட்டியை எடுத்து வந்து அவர் தலையில் கவுத்தி வைத்தான். அந்த சிறுவனை பார்க்கும் போது முருகப் பெருமானாக நினைத்து அந்த சட்டியை தலையில் அப்படியே வைத்துக் கொண்டார் நம் சித்தர். அவர் எங்கு சென்றாலும் சரி,  உணவு சாப்பிடும்போது சட்டியில் வாங்கி சாப்பிடுவார். மீண்டும் அதை சுத்தப்படுத்தி தலையில் வைத்துக் கொள்வார்.

நமது சட்டிசாமி சித்தரின் குருநாதர் பழனி, பாலசமுத்திரம் சல்லி சாமியார் ஆவார். சட்டி சுவாமிகள் சித்திரை மாதம் ஏழாம் நாள் கிருஷ்ணபட்சம், அனுஷம் நட்சத்திரம் அதாவது 24.04.1927 புதன்கிழமை அன்று காலை 9:45 மணிக்கு சமாதி நிலையடைந்தார்.

பழனி ஸ்ரீ சாதுசாமிகளால் சமாதி செய்யப்பட்டது. ஜீவ பீட ஆலய முகவரி ஓம் ஸ்ரீ சட்டிசாமிகள் ஜீவ சமாதி ஆலயம். சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபட்டு நம் வாழ்வின் கர்ம வினையின் வீரியத்தை குறைத்துக் கொள்வோம்.