நவநாத சித்தர்கள் – பாகம் 2!

99

நவநாத சித்தர்கள் – பாகம் 2!

சித்தர்கள் பட்டியல் விசித்திரமானது. நவநாத சித்தர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். முதன் முதலாக சித்தர்கள் என்று பட்டியலிட்டவர்கள், சத்யநாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுனி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கஜேந்திர நாதர் மற்றும் கோரக்க நாதர் ஆகிய 9 சித்தர்கள் அடங்கிய பட்டியலைத் தான் வெளியிட்டார்கள். சித்தர்களை வடக்கில் வரிசைப்படுத்தியவர்கள், நவநாத சித்தர்கள். இதே போன்று தெற்கில் சித்தர்களை வரிசைப்படுத்தியவர்கள் பதினெண் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அபிதான சிந்தாமணி வேறொரு பட்டியலைப் வேறு பெயர்களுடன் தருகிறது. சத்துவ நாதர், சாலோக நாதர், ஆதி நாதர், அருளி நாதர், கடயிந்திர நாதர், கோரக்க நாதர், குக்குட நாதர். இதே போன்று இருக்கும் இன்னொரு பட்டியலில் அந்தளேந்திரர், கோரக்கர், கொங்கணர், நாகார்சுநர், மச்சேந்திரர், பீமநாதர், அருணகிரி நாதர், புஜங்க குருநாதர், ஆதிநாதர் என்று வேறு சிலர்.

கணநாதர் என்பவரும் நாக நாதர் என்று ஒரு குறிப்பு குறிப்பிடுகிறது. சித்தர்கள் என்று எத்தனை பேர் இருந்தால் என்ன அவர்கள் வாழ்வும் வரலாறும் அவர்கள் கற்றுத் தந்த சித்துக்களும் அருளிச் சென்ற நூல்களும் சித்தர்களின் சிறப்பைத் தான் சுட்டிக் காட்டுகின்றன.

2ஆவது சித்தர் – சதோக சித்தர்:

யோக ஞானம் பற்றி அதிகம் பாடியதால் யோக சித்தர்’ என்றழைக்கிறது சித்தர் உலகம். சதோக நாதர் அடிப்படையில் ஒரு சைவர். 47 கண்ணிகள் கொண்ட இவரது பாடல்கள் மாங்குயிலே என்று நிறைவு கொள்கின்றன.

3ஆவது சித்தர் ஆதிநாதர்:

வடமொழியிலிருக்கும் வேதங்கள், உபநிடதங்கள் முதலானவற்றைத் தமிழில் பாடியவர். அதனால் வேதாந்தச் சித்தர் என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு. சித்தர் இலக்கியத்திற்கு பெருமை சேர்ப்பவை நவநாத சித்தர் பாடல்கள். அவற்றில் ஆதி நாதர் அருளிய 32 கண்ணிகளால் ஆன பாடல் தொகுதி குறிப்பிடத்தக்கது. ஞான சூத்திரம் 27 பாடல்கள். கண்ணியில் நூறு வகை.

யோனி பேதம் எழுவகைத் தோற்றம் பிரணவம் ஐந்தெழுத்து ஆறாதார வடிவம் சமாதி, மண், பெண், பொன்னாசை முதலானவற்றை விரித்துச் சொல்லி உணர்ந்து படிப்போரை ஆதி நாதர் உய்விக்கின்றார்.

ஞான சூத்திரத்தில்

வாசி மார்க்கம்

காயகற்பம்

நாக கற்பம்

வியாதிகள் பற்றி எடுத்துரைக்கின்றார்.