நவநாத சித்தர்கள் – பாகம் 3!

74

நவநாத சித்தர்கள் – பாகம் 3!

சித்தர்கள் பட்டியல் விசித்திரமானது. நவநாத சித்தர்கள் என்று ஒரு பட்டியல் இருக்கும். முதன் முதலாக சித்தர்கள் என்று பட்டியலிட்டவர்கள், சத்யநாதர், சதோக நாதர், ஆதி நாதர், அனாதி நாதர், வகுனி நாதர், மதங்க நாதர், மச்சேந்திர நாதர், கஜேந்திர நாதர் மற்றும் கோரக்க நாதர் ஆகிய 9 சித்தர்கள் அடங்கிய பட்டியலைத் தான் வெளியிட்டார்கள். சித்தர்களை வடக்கில் வரிசைப்படுத்தியவர்கள், நவநாத சித்தர்கள். இதே போன்று தெற்கில் சித்தர்களை வரிசைப்படுத்தியவர்கள் பதினெண் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

நான்காவது சித்தர் காலாங்கி நாதர். அனாதி நாதர் என்பது இவரது சிறப்புப் பெயர். காலாங்கி நாதர் தான் கமலமுனி என்று ஒரு சித்தர் குறிப்பு கூறுகிறது. இவர், திருமூலரின் சீடர் என்பது குறிப்பிடத்தக்கது. உபதேச ஞானத்தில் முக்தி ரகசியம், தியானம் செபிக்கும் மந்திரம், சுழிமுனை, சிவயோக ஞானம், வாசியோக ஞானம் என ஆன்மீக நுட்பத்தைக் கற்றுத் தருகிறார்.  இவர், சீனாவைச் சேர்ந்தவர். எனினும் தமிழகம் வந்து சித்தராகி சதுரகிரியில் நெடுநாள் இருந்தார்.

நவ நாதர்களில் 5ஆவது சித்தர் வகுனி நாதர். மௌன உபதேசம் அருளியதால் இவர் மௌன சித்தர் என்றும் பூஜிக்கப்படுகிறார். சக்தி உபாசகரான வகுளி சித்தர் 12 பாடல்களாக குறிஞ்சிப்பா படைத்திருக்கிறார். 8 பாடல்களில் கற்பூர தேகசம் பிரணவ துரியம் மௌனத்திலிருந்து மார்க்கம் நெற்றிக்கண் ரகசியம் மகா தீட்சை முதலானவற்றை விளக்கி உள்ளார்.

சாப்பாடு, தூக்கமின்றி யோக நிஷ்டை புரிந்து உற்றாரைத் துறந்து மலைக் குகையில் தவமிருந்து கண்ணுக்கு எட்டாத பரவெளியைக் கண்டோம். பின்னர் காயகற்பம் உண்டு உடலை கற்பமாக பெற்றோம். அதன் பின்னர் சக்தி சக்கர பீடமேறி சுத்த வெளியைக் கண்டோம். சகலமும் பரவெளியென உணர்ந்து சித்தி பெற்ற முக்தர்களைத் தினம் தினம் தரிசித்தோம் என ஞானநிலைப் படிகளை வகுளி நாதர் படிப்படியாய் வகுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.