பதஞ்சலி சித்தரின் பதினாறு போற்றிகள்!

424

பதஞ்சலி சித்தரின் பதினாறு போற்றிகள்!

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். கடவுளிடம் கேட்பதை, சித்தர்களே முன் வந்து நமக்கு அளிப்பார்கள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, தெய்வீக செயல்களையும், நினைத்த காரியங்களையும் செய்பவர்கள் தான் சித்தர்கள். இதையே சித்து விளையாட்டு என்று அழைக்கின்றனர்.

பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர். யோகக் கலையினை முறையாக வைகுத்துக் கொடுத்துள்ளார். இவர், பதஞ்சலி யோக சூத்திரம் என்ற நூலை இயக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த நூல் தான் யோக கலைக்கு அடிப்படை கருவியாக விளங்குகிறது.

பதஞ்சலி முனிவரின் குருநாதர் ந ந்தி தேவர். இவருக்கு கௌடபாதர் என்ற சித்தர் சீடராக இருந்துள்ளார். பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று பதஞ்சலி முனிவர் பிறந்துள்ளார். இவர், 5 யுகம் 7 நாட்கள் வரை இந்த பூமியில் வாழ்ந்துள்ளார். இறுதியாக இவர் ஜீவசமாதி அடைந்த இடம் சிதம்பரம் என்றும், ராமேஸ்வரம் என்றும் சொல்லப்படுகிறது.

 1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!
 2. ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!
 3. ஒளிமயமானவரே போற்றி!
 4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!
 5. கருணாமூர்தியே போற்றி!
 6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!
 7. பூலோகச் சூரியனே போற்றி!
 8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!
 9. பேரும் புகழும் உடையவரே போற்றி!
 10. இன்மொழி பேசுபவரே போற்றி!
 11. இகபரசுகம் தருபவரே போற்றி!
 12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!
 13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!
 14. அங்ஞானம் அகற்றுபவரே போற்றி!
 15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!
 16. யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி! போற்றி!