பதஞ்சலி சித்தரை பூஜித்தால் கிடைக்கும் நன்மைகள்!

1286

பதஞ்சலி சித்தரை பூஜித்தால் கிடைக்கும் நன்மைகள்!

பங்குனி மாதம் மூலம் நட்சத்திர நாளில் அத்திரி மகரிஷி – அனுசுயாதேவிக்கு மகனாக பதஞ்சலி சித்தர் பிறந்துள்ளார். ஆதிசேஷனின் அவதாரமாக தோன்றியவர் என்றும், பிரம்ம தேவரின் கண்ணிலிருந்து தோன்றியவர் என்றும் கூறப்படுகிறது. ஆதலால், பதஞ்சலி சித்தரின் மூச்சுக்காற்று பட்டால் அனைத்துமே சாம்பலாகிவிடும். எனவே தான், தனது சீடர்களுக்கு அசரீரியாக (ஒலியாக) உபதேசம் செய்தார்.

ஆதிசேஷ அவதாரத்தில் ஆனந்த தரிசனம் கண்ட பதஞ்சலி சித்தர் சிதம்பரத்தில் ஜீவசமாதி அடைந்தார். பதஞ்சலி சித்தரை பூஜித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்…

பதஞ்சலி சித்தரை பூஜித்தால் கிடைக்கும் நன்மைகள்:

பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்:

ஒரு சிறிய பலகையை எடுத்துக் கொண்டு அதில், மஞ்சள் தடவி அரிசி மாவு கொண்டு கோலமிட்டு, அந்தப் பலகையில் பதஞ்சலி சித்தரின் புகைப்படத்தை வைக்க வேண்டும். படத்திற்கு முன்பாக திருவிளக்கை வைத்து நல்லெண்ணை ஊற்றி இரண்டு முக தீபம் ஏற்ற வேண்டும். மேலும், வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்கள், பிச்சிப்பூ மற்றும் முல்லைப்பூ ஆகிய மலர்களைக் கொண்டு பூஜை செய்து இந்த 16 போற்றிகளை சொல்லி வழிபட வேண்டும்…

பதஞ்சலி சித்தரின் பூஜையின் பலன்கள்:

1.குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

2.செல்வம் பெருகும், மகிழ்ச்சி உண்டாகும்.

3.எலும்பு தொடர்பான நோய்கள் குணமடையும்.

4.குழந்தை பாக்கியம் உண்டாகும்.

5.வியாழ கிரக தோஷம் நீங்கும்.

6.உஷ்ணம் தொடர்பான நோய்கள் தீரும்.

7.கல்வி கலையில் சிறந்து விளங்குவார்கள்.

8.வாழ்வில் வெற்றி உண்டாகும். எல்லா தடைகளும் நீங்கும்.

9.எல்லா நலன்களும் பெற்று இன்புற்று வாழ்வீர்கள்…