பெண்ணுக்கு முத்தம் கொடுத்த அக்கா பரதேசி சாமிகள்!

194

பெண்ணுக்கு முத்தம் கொடுத்த அக்கா பரதேசி சாமிகள்!

சித்தர்களின் நோக்கம் என்ன? சித்தர்கள் என்பவர்கள் யார்? மனிதர்களாக பிறந்த ஒவ்வொராலும் சித்தர்களாக முடியுமா? என்று பல கேள்விகள் நம் மனதில் தோன்றும். சித்தத்தை அடக்கி ஆண்டவர்கள் மட்டும் சித்தர்கள் இல்லை. இந்த உலகை, பிரபஞ்சத்தை, உலக ரகசித்தை, உயிரின் தத்துவத்தை என்று பலவற்றையும் ஆராய்ந்து அறிந்தவர்களே சித்தர்கள்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து இயற்கை பற்றி முற்றிலும் அறிந்து தெரிந்தவர்களை தான் சித்தர்கள் என்கிறோம். மனிதர்களாக பிறந்த ஒவ்வொராலும் சித்தர்களாக முடியும் என்பது உண்மை. ஏனென்றால், சித்தர்களும் மனிதர்களாக பிறந்து இவ்வுலகில் வாழ்ந்தவர்கள்.

சரி, இந்த கலியுகத்தில் சித்தர்களாக வாழ முடியுமா? இது சாத்தியமா? என்று கேட்டால், அது முடியாத காரியம். ஏனென்றால், சித்தர்களை குருவாக ஏற்றுக் கொண்டு அவரது வழி நடக்கும் சீடர்களால் கூட சித்தர்களாக மாறுவதற்கு ஓரளவு மட்டுமே சாத்தியம்.

யார் ஒருவர் தன்னையும், இயற்கையையும், உலகையும் பற்றி முழுமையாக அறிந்து கொள்கிறாரோ, அவரால் மட்டுமே சித்தராக முடியும். அப்படி சித்தராக முடியாத நிலையில் வாழும் மனிதர்கள் துன்பங்களிலிருந்தும், துயரங்களிலிருந்தும் காத்துக் கொள்வது எப்படி? யார் அவர்களுக்கு உதவி செய்வார்கள்? வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான். அவரவர் செய்த ஊழ்வினையை அவர்களே அனுபவிக்க வேண்டும். என்னதான், பரிகாரம் செய்தாலும் கர்மாவின் தாக்கம் அதிகமாக இருந்தால் அதனை அனுபவித்தே ஆக வேண்டும்.

இது போன்ற சூழலில் மனிதர்களுக்கு சித்தர்களால் மட்டுமே உதவ முடியும். ஒவ்வொருவரும், தூய்மையான வாழ்க்கை, நேர்மை, அன்பு, கருணை உள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்று சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த உலகில் பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் வெறும் 18 பேர் மட்டுமே பலரும் அறிந்திருக்கின்றனர்.

திருமூலர், இராமதேவ சித்தர், கும்பமுனி, இடைக்காடர்,  தன்வந்திரி, வால்மீகி, கொங்கணர், கமலமுனி, நந்தி தேவர், பதஞ்சலி, பாம்பாட்டி சித்தர், போதகுரு, போகர், மச்சமுனி, சட்டைமுனி, கோரக்கர், குதம்பைச்சித்தர் மற்றும் சுந்தரானந்தர். இவர்கள் தவிர நந்தி சித்தர், ஞானகுரு குள்ளச்சாமிகள், சண்டேசர், அக்கா சுவாமிகள், அகத்தியர், அருணகிரிநாதர், அகப்பேய் சித்தர், இராகவேந்திரர், இராம தேவர், இராமகிருஷ்ணர், இராமனுஜர், இராமலிங்க சுவாமிகள், ஷீரடி சாய்பாபா, இராணி சென்னம்மாள், அறிவானந்தர், காளங்கி நாதர், குமரகுருபரர், கொங்கண சித்தர், கோட்டூர் சுவாமிகள், கௌதமர், சந்திரானந்தர் என்று ஏராளமான சித்தர்கள் இருக்கின்றனர்.

சரி இதெல்லாம் எதற்கு சொல்றீங்க என்று பாக்குறீங்களா? காரணம் இருக்கு, இன்று நாம் அக்கா சுவாமிகள் பற்றி பார்க்கப் போகிறோம். ஆம், அக்கா என்று கூட பார்க்காமல் முத்தம் கொடுத்தவர் தான் இந்த அக்கா சுவாமிகள். புதுச்சேரி பகுதியில் உள்ள வைத்திக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்த சித்தர். அக்கா பரதேசி சாமியார், குரு அக்கா சுவாமிகள், அக்கா சித்தர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.

ஏன் அக்கா சுவாமிகள் என்று அழைக்கப்படுகிறார்?

சிறுவனாக இருந்த போது மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, விளையாட்டாக களிமண்ணில் விநாயகர் செய்து அதற்கு பூஜை செய்து வந்துள்ளார். அப்போது, அவரது விநாயகரை ஒரு பெண் வழிபட்டுள்ளார். தனது விநாயகரை ஒரு பெண் வழிபடுவதைக் கண்டு மனமகிழ்ந்த அக்கா சுவாமிகள், அந்தப் பெண்ணிற்கு கையில் முத்தம் கொடுத்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் அக்கா வயதுடைய பெண்ணுக்கு முத்தம் கொடுக்கலாமா? என்று கேட்டுள்ளார். அதன் பின் தனது செயலை நினைத்து மனம் வருந்திய அக்கா சுவாமிகள், பெண் இன்பத்திலிருந்து தன்னை முற்றிலும் விலக்கி ஒவ்வொரு பெண்ணையும் அக்கா என்றே அழைத்துள்ளார். அதனால், அக்கா சுவாமிகள், அக்கா சுவாமிகள் என்று அழைக்கப்பட்டுள்ளார்.