மீன் உருவத்தில் மச்சமுனி சித்தர்!

803

மீன் உருவத்தில் மச்சமுனி சித்தர்!

ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர் தான் இந்த மச்சமுனி சித்தர். மிக விசேஷமான பிறப்புடனே இந்த மச்சமுனி சித்தர் பிறந்திருக்கிறார். அது எப்படி என்றால், பூக்கள் நிறைந்த ஒரு நீர் நிலையின் (தடாகம்) கரையில் சிவபெருமான், உமா தேவியாருக்கு பிறப்பு, இறப்பு, உயிர்களின் தோற்றம் பற்றி கூறி வந்துள்ளார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த உமா தேவியார், கண் அசந்து தூக்கிவிட்டார்.

ஆனால், அந்த நீர் நிலைகளில் நீந்துக் கொண்டிருந்த தாய் மீன் ஒன்று சிவபெருமான் கூறி கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த தாய் மீனின் வயிற்றில் ஒரு குட்டி மீனும் இருந்துள்ளது. என்று ஒரு தேவரின் குரலை அது செவி கொடுத்து கேட்கிறதோ அன்று அதற்கு சாப விமோட்சனம் கிட்டும் என்று இருந்திருக்க வேண்டும்.

அந்த குஞ்சு மீனும், தாய் மீனும் மனித வடிவம் பெற்றன. இதையடுத்து, சிவபெருமானையும், உமா தேவியாரையும் காலில் விழுந்து வணங்கினர். தாயின் வயிற்றில் ஒரு சிறிய மச்சம் போன்ற வடிவில் இருந்து சிவபெருமானின் உபதேசம் கேட்டு பிறந்துள்ளதால், அந்த குஞ்சு மீனுக்கு மச்சேந்திரநாதன் என்ற பெயரும் வந்தது.

மச்சேந்திரநாதன் திருப்பரங்குன்றத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோயிலில், காசி விஸ்வநாதரிடம் தனது ஆன்மாவையும், கங்கை தீர்த்ததில் தனது உடலை மீனாகவும் ஜீவசமாதி அடைந்துள்ளார். இவர் 300 ஆண்டுகளும், 62 நாட்களும் வாழ்ந்திருக்கிறார் என்று கதைகள் கூறுகின்றன்.

தயிர் வாங்கி வந்து மலை, குன்று, ஏரி, ஆறு ஆகியவற்றில் தேங்கியிருக்கும் சுனை நீரில் விடும் பொழுது மச்சமுனி, மீன் உருவத்தில் வந்து தயிரை சாப்பிட்டு நம் பாவங்களை நீக்குவார் என்பது நம்பிக்கை.