‍ ஸ்ரீ சங்கர ஜெயந்தி 2021

287

இன்றிலிருந்து 2529 வருடங்கள் முன்பு, கலியப்தம் 2594 (பொயுமு 509) சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பஞ்சமியான வைசாக சுக்ல பஞ்சமியன்று ஶ்ரீ சங்கர பகவத்பாதர் அவதரித்தார்.தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமல், 8 எனும் பிஞ்சு பருவத்தில் துறவறம் மேற்கொண்டு 32 வயது வரையில் இன்றிலிருந்து 2529 வருடங்கள் முன்பு, கலியப்தம் 2594 (பொயுமு 509) சித்திரை அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பஞ்சமியான வைசாக சுக்ல பஞ்சமியன்று ஶ்ரீ சங்கர பகவத்பாதர் அவதரித்தார்.

தனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமல், 8 எனும் பிஞ்சு பருவத்தில் துறவறம் மேற்கொண்டு 32 வயது வரையில் மட்டுமே இருந்தார். இந்த காலத்திற்குள், உபநிஷத்துகளும் கீதையும் காட்டும் ஸித்தாந்தம் அத்வைதமே என்பதை தத்துவ ஈடுபாடு உள்ளவர்களுக்காக விளக்கி நூல்களை இயற்றினார். சாமானிய மனிதன் இறைவனிடம் ஈடுபடுவதற்கு ஏதுவாக, பல ஸ்தோத்ரங்களை இயற்றி இறைவனின் அனைத்து வடிவங்களையும் சமமாக வழிபடும்படி அறிவுறுத்தினார். வைதிக ஸநாதந தர்மத்தைப் பரப்ப பாரத தேசமெங்கும் காலால் ஸஞ்சாரம் செய்தார்.

பகவத்பாதரின் அவதாரத்தால் தான் நாம் சிவராத்ரி, ராம நவமி, கோகுலாஷ்டமி முதலியவற்றைக் தொடர்ந்து கொண்டாடுகிறோம். இல்லையேல் அக்காலத்தில் பரவியிருந்த அவைதிக பழக்கங்களால் ஸநாதந ஸம்ப்ரதாயங்கள் அழிந்துபோயிருக்கும். ஆகவே மற்ற ஜயந்திகளைக் காப்பாற்றிய ஜயந்தி என்பதே சங்கர ஜயந்தியின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே இந்த நாளில் ஶ்ரீ சங்கர பகவத்பாதரை நினைவுகூர்ந்து வழிபடுவது நமது கடமையாகும்.