அனுஷத்தில் அவதரித்த மனித தெய்வம் – மகா பெரியவா ஜெயந்தி

260

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் , வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் என்ற வரிகளை கேட்டது உண்டு . அந்த வரிகளை மெய்யாகிய காஞ்சி தெய்வம் அவதரித்த வைகாசி அனுஷம் இன்று .

இந்த உலகின் நன்மைக்காகத் துறவறம் பூண்டு, லட்சோப லட்சம் பக்தர்களைக் காத்து அருள் செய்து அவர்களை ஆன்மிக வழியில் நடத்திய அவதாரம் அது. கண்கண்ட தெய்வம் என்னும் சொல்லுக்கு அடையாளமாக விளங்கிக் காண்பவர்கள் எல்லோரையும் தன் காருண்யத்தால் காத்த அவதாரம். அந்த அவதாரம் வேறு யாரும் இல்லை… தட்சிணாமூர்த்தியின் அம்சமாய் காஞ்சி காமாட்சியின் அருளுருவாய் வாழ்ந்து இன்றும் சூட்சும ரூபமாய் அருள்பாலிக்கும் ஸ்ரீமகாபெரியவர்தான் அனுஷத்தில் அவதரித்த அந்த அற்புதர்.

வாழ்நாள் முழுவதும் அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்திய அந்த மகானின் அவதார தினம் இன்று. மகாபெரியவரின் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் அனுஷ நட்சத்திர நாளில் மகாபெரியவருக்கு வழிபாடுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதிலும் அவர் அவதாரம் செய்த வைகாசி அனுஷம் மகா புண்ணியம் நிறைந்த நாளாக அவர்களால் கொண்டாடப்படுகிறது. வருடம் தோறும் காஞ்சி மடம் இதை கோலாகலமாக கொண்டாடுவதும் , வழிபாடுகள் நடைபெறுவதும் வழக்கம் . இந்த ஆண்டு லோக்கடவுன் என்பதால் பக்தர்கள் தங்கள் வீடுகளில் மகா பெரியவாக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள் .

இன்று மகாபெரியவா அவதார தினமும் குருபூர்ணிமாவும் இணைந்துவருகிறது. குருவின் அருளிலிருந்தால் குறைவின்றி வாழ்ந்திடலாம். எனவே அவரவர் தங்களின் குருவினை தியானித்து வணங்கி வழிபட வேண்டிய தினம் இன்று. மேலே சொல்லப்பட்ட உப்பு நீர் குளம்போல நம் வாழ்க்கையும் வறண்டு, சுவையற்று இருக்கலாம். குருவின் கருணை மழை நம்மீது பொழிய ஆரம்பித்தால் நம் வாழ்க்கையும் சுவைமிக்கதாக வளம் நிரம்பியதாக மாறிவிடும். அப்படி குருவின் அருளைப் பெற்றுத்தரும் தினமாக இந்த குருபூர்ணிமா திகழ்கிறது. அனைவர்க்கும் இறைவன் அருள் கிடைக்கட்டும் .