தியாகராஐரின் ராம பக்தி !

601

18ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டில் திருவாரூரில் ராம பக்தரான ராமபிரம்மம் என்பவருக்கும் சீதாம்மாவுக்கும் மூன்றாவது புதல்வராக தியாகராஜர் பிறந்தார். இவர் பிறந்த பின் இவரின் குடும்பத்தினர் தஞ்சாவூருக்கு அண்மையில் உள்ள திருவையாறில் குடியேறினர்.தியாகராஜருக்கு — 8 வது வயதிலேயே உபநயனம் நடைபெற்றது. நுட்ப புத்தியும் ராம பக்தியும் கொண்ட தியாகராஜர் ஓய்வு நேரங்களில் சோந்தி வெங்கடராமையரிடம் சங்கீதம் பயின்று வந்தார். குருவின் அருளாலும் வழிநடத்தலாலும் சங்கீத சம்பிரதாயங்களில் மிக சிறந்த முறையில் இவர் கற்று தேறினார்.18 வது வயதில் தியாகராஜருக்குத் திருமணம் நடந்தேறியது

தியாகராஜர் தன் இளம் வயதிலே சிறிய ராம-சீதை-லக்ஷ்மண -ஆஞ்சநேய விக்கிரகங்களை வைத்து பூஜை செய்து –ராம மந்திரத்தை உச்சரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் பொன்_பொருள்_ஆசை இன்றி எந்த நேரமும் ராம_மந்திரத்தையே ஸ்வாசமாக கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த தியாகராஜரின் அண்ணன் ஜபேசன் தன் தம்பி இப்படி பொறுப்பில்லாமல் எந்த நேரமும் ராம_மந்திரத்தை கூறி கொண்டே இருந்தால் குடும்ப பொருளாதார நிலை என்னாவது —

இதற்க்கெல்லாம் காரணம் இவன்பூஜிக்கும் ராம_சீதை_லக்ஷ்மண -ஆஞ்சநேய_விக்ரகம்தானே —முதலில் அதை அப்புற படுத்தினால் தான் இவன் குடும்ப பொறுப்பை சரிவர கவனிப்பான் என்றெண்ணி ஒரு நாள் இரவு தியாகராஜர் தூங்கும் நேரம் பார்த்து —ராம-சீதை-லக்ஷ்மண-ஆஞ்சநேய விக்ரகத்தை எடுத்து போய் காவேரி ஆற்றில் போட்டு விட்டு வந்து_உறங்கி_விட்டார் —மறுநாள் பொழுது விடிந்ததும் –எழுந்த தியாகராஜர் தன்ராம_விக்ரகத்தை காணாமல் அழுதார் ஐயோ_ராமா_என்னை விட்டு போய்-விட்டாயே ஏன் என்னோடு இருக்க பிடிக்கவில்லையா —என்று அழுதுபுரண்டார் —-அதை பார்த்த அவர் அண்ணன் தியாகராஜரிடம் உன் ராமன் இனி வரமாட்டான் அவன் காவிரியாற்றில் சங்கமம்_ஆகிவிட்டான்

நீ ஒழுங்காக குடும்ப -பொறுப்பை கவனி என்றார் —ஆனால் தியாகராஜர் — என் ராமன் எங்கிருந்தாலும்வருவான் என்னை விட்டு அவன் ஒருபோதும்பிரியமாட்டான் —என்று திண்ணமாக கூறி ராம கீர்த்தனை பாட காவிரியாற்றில் மூழ்கியிருந்த ராம-சீதை-லக்ஷ்மண-ஆஞ்சநேய –விக்ரகம் அவர்கீர்த்தனையை_கேட்டு
அவர் இல்லத்தில் வந்து அமர்ந்தது –தன் தம்பியின் தூய்மையான ராம-பக்தியை உணர்ந்த ஜபேசன்,அதன்_பின் தியாகராஜரின் ராம விக்ரக_பூஜைக்கு எந்த வித இடையூறும் செய்யவில்லை.

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !