மணலிக்கீரை-மருத்துவ குணங்கள்

0 124

மணலிக்கீரை:

 

மணலிக்கீரையின் இலை, தண்டு, வேர் ஆகிய அனைத்துமே

மருத்துவக்குணம் வாய்ந்தது.

 

மருத்துவ குணங்கள் : 

 

மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து

சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகுணமாகும்.

ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் பித்த அதிகரிப்பே காரணம்

ஆகும். மேலும் மூளைக்குத் தேவையானசத்து குறைவதாலும்

இப்பிரச்சனை ஏற்படுகிறது. இப்பிரச்சனை தீருவதற்கு மணலிக்கீரை‌யை

மசியல்செய்து சாப்பிட வேண்டும்.

மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு  நன்கு அரைத்து அதில்

70 கிராம் அளவு எடுத்து நீரில்கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில்

பருகினால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.

மார்புசளி வயிற்றுப்புண் குணமாகும்.

மணலிக்‌கீரை வதக்கி சாப்பிட்டால்  மூளை நரம்புகள் பலப்படும்.

மணலிக்கீரையை கஷாயம் செய்து குடித்தால் ஈரல் பலப்படும்.

இத்தகைய மருத்துவக்குணங்ள்  வாய்ந்த மணலிக்கீரையை நாம் நம் உடல்

ஆரோக்கியத்துக்காகபயன்படுத்துவோம்

 

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்….

வாழ்வில் வளம்பெறுவோம்….

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.